[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/உள்ளடக்கத்துக்குச் செல்

கணினி களஞ்சியப் பேரகராதி/L

விக்கிமூலம் இலிருந்து
L

L1 cache : எல்1 கேஷ்; நிலை 1 இடைமாற்றகம் : இன்டெல் 1486 மற்றும் அதைவிட மேம்பட்ட செயலிகளில் உள்ளமைக்கப்பட்டுள்ள இடைமாற்று நினைவகம். நிலை 1 இடைமாற்றகம் பொதுவாக 8கேபி கொள்திறன் உள்ளது. ஒற்றைக் கடிகாரச் சுழற்சியில் படித்துவிட முடியும். எனவே தொடக்க காலங்களில் இது பரிசோதிக்கப்பட்டது. இன்டெல் ஐ1486 ஒரேயொரு நிலை 1 இடைமாற்றகம் கொண்டது. பென்டியம் செயலியில் இரண்டு உண்டு. ஒன்று ஆணைகளுக்கு, மற்றொன்று தரவுகளுக்கு.

L2 cache : எல்2 கேஷ்; நிலை2 இடைமாற்றகம் : ஐ1486 மற்றும் அதனிலும் மேம்பட்ட செயலிகள் பயன்படுத்திக் கொள்ளும் இடைமாற்று நினைவகம். இது செயலிக்கு அருகில் தாய்ப் பலகையில் பொருத்தப்பட்டுள்ள நிலை ரேம் (static RAM) ஆகும். நிலை 2 இடைமாற்றகம் பொதுவாக 128 கேபி முதல் 1 எம்பி வரை இருக்கலாம். முதன்மை நினைவகத்தைவிட வேகமானது. ஆனால், செயலிக்குள்ளே உள்ளமைந்துள்ள நிலை 1 இடைமாற்று நினைவகத்தைவிட மெதுவானது.

L8R : எல்8ஆர் : பிறகு என்று பொருள்படும் Later என்ற சொல்லை செல்லமாய்ச் சுருக்கமாகக் குறிப்பிடல். சியூஎல்8ஆர் (See you Later) என்பதைப் போன்றது. மின் அஞ்சல், யூஸ்நெட் செய்திக் குழுக்களில் தற்காலிகமாக விடைபெறும்போது பயன்படுத்தப்படுவது.

. la : எல்ஏ : ஓர் இணையதள முகவரி லாவோஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

label : அடையாளம்; குறி : முகப்புச் சீட்டு; முகப்பு : ஒரு நிரலை விவரிக்க அல்லது அடையாளம் காண கணினி நிரல் தொடரில் பயன்படும் பெயர் அல்லது அடையாளம் காட்டி. வாக்கியச் செய்தி, தரவு மதிப்பு, பதிவு, பொருள் அல்லது கோப்பு போன்றவைகள் இவ்வாறு பயன்படுத்தப்படும்.

labeled common : பொதுவான சீட்டு : நிரல் தொடர்அலகுகளுக்குள் பகிர்ந்து கொள்ளப்படும் நினைவகப் பகுதி. அதற்கென்று தனியாகப் பெயர் கொடுக்கப் படும். Blank (unlabelled) Common என்பதற்கு எதிர்ச் சொல்.

label prefix : முகப்புச் சீட்டு முன் சொல்; முகப்புச் சீட்டு முன்னொட்டுச்சொல் : அகலத்தாளில் அரை நுழைவி ஆரம்பத்தில் தட்டச்சு செய்யப்படும் எழுத்து. சான்றாக 1-2-3இல் ஒற்றை மேற்கோள்குறி வருமானால் அரையில் இடதுபக்கமாக ஒழுங்குபடுத்துமாறும், இரட்டை மேற்கோள்குறி வருமானால் வலதுபக்கம் ஒழுங்குபடுத்து மாறும் நிரல் ஏற்கப்படும்.

label record : சீட்டுப் பதிவேடு : காந்த நாடாவில் சேமிக்கப்படும் கோப்பைப் பற்றிய தரவைக் கொண்டுள்ள காந்தப் பதிவேடு.

lable, header : தலைப்புச் சிட்டை.

lab hours : செய்முறை விளக்கம்; ஆய்வு நேரம்.

lable identifier : சிட்டை அடையாளம் காட்டி.

lable, trailer : முன்னோட்டச் சிட்டை.

lag : இடைவெளி; பிந்துதல் : இரண்டு நிகழ்வுகள், எந்திர அமைப்புகள் அல்லது நிலைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு.

LAN : லேன் : Local Area Network என்பதன் குறும்பெயர். வன்பொருள், மென்பொருள், அமைப்புகள் ஆகியவைகள் குறிப்பிட்ட இடைவெளிக்குள் தரவுத் தொடர்பு ஏற்படுத்துகின்றன.

land : பொருத்துப் பரப்பு : மின்னணு பொருட்களைப் பொருத்துவதற்கு அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டையில் உள்ள இடப்பகுதி.

Land information system : பொருத்துபரப்புதகவல் மையம் : தரை மேலாண்மை தகவலை ஆராயப் பயன்படுத்தும் ஒரு கணினி அமைப்பு (வன்பொருள் மற்றும் மென்பொருள்). இயற்கை மூலாதாரங்களின் விநியோகம் நிலைப் பயன்படுத்தும் முனைகள், சொத்து உரிமை, வாடகையிருப்பு மதிப்புகள் போன்றவைகள் இதற்குச் சான்று. தரை தகவல் மையம் ஒரு நேர்முக அமைப்பு அல்ல. வெளிப்புறத்தில் இருந்து அடிப்படைத் தகவலை விநாடிக்கு விநாடி பெறுகிறது. நிலப்படம் அமைத்தல், தகவல் மற்றும் தரவுத்தளங்கள் இவற்றின் பணிகள்.

landing zone : தரையிறங்கும் பகுதி : படி/எழுது முனையை நிறுத்துவதற்கான வன்வட்டின் பகுதி. முந்தைய வன்வட்டு அமைப்பில் நிறுத்துவதற்கான ஆணை இடப்பட வேண்டும். ஆனால், இப்போது மின்சாரம் நிறுத்தப்படும்போது தானாகவே நடந்து விடுகிறது. அது நிறுத்தப்படும் இடம் விவரம் சேமிக்கப்படாத இடமாக இருக்கும். நிலைவட்டில் மிக அதிகமான எண் கொண்டுள்ள தடம்/ உருளையாக இருக்கும்.

landmark : லேண்ட் மார்க் : அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட உரிமையாளர் வன்பொருள்/மென்பொருள் மதிப் பீட்டமைப்பு.

landmark rating : லேண்ட் மார்க் விகிதாச்சாரம் : லேண்ட் மார்க் ரிசர்ச் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பரவலாகப் பயன்படும் பீ. சி. செயல்திறன் சோதனை. மையச் செயலக வேகம் கடிகாரத்திற்குத் தேவைப்படும் வேகமாக ஏடி-வகுப்பு எந்திரங்களில் இருக்கிறதா என்று மதிப்பீடு செய்வது. இதன் மூலம் சமமான செயல்திறன் தர முடியும்.

lands : சமதளங்கள் : குறுவட்டுகளில் 1 எனும் பிட்டைக் குறிக்கும். குழி (pit) 0-வை குறிக்கும்.

landscape : லேண்ட்ஸ்கேப் ; அகண்மை : அச்சுப் பிரதி உருவங்களை அமைப்பது குறித்தது. வேலையை ஒரு பக்கத்தில் நீள வாட்டத்தில் அச்சிட வைக்கிறது. பொதுவாக செங்குத்தாக அச்சிடுவதே வழக்கமாகும்.

landscape format : அகண்மை வடிவமைப்பு : பரப்புத் தோற்ற உருவமைவு.

landscape mode : பரப்புத் தோற்றப் பாங்கு : அகண்மைப் பாங்கு : ஓர் உரைப்பகுதி அல்லது ஒரு படிமம் உயரத்தைவிட அகலம் அதிகம் இருப்பின் அச்சுப்பொறியில் கிடைமட்டமாக அகலவாக்கில் அச்சிடலாம். நீள்மைப் பாங்கு Portrait எனப்படும்.

landscape monitor : அகண்மை திரையகம்; பரப்புத் தோற்றக் காட்சித்திரை : உயரத்தைவிட அகலம் அதிகம் இருக்கும் கணினித் திரையகம். இது போன்ற திரை உயரத்தைக் காட்டிலும் அகலம் 33 சதவீதம் அதிகம் இருக்கும். ஒரு தொலைக்காட்சித் திரையின் நீள அகல வீதங்களை ஒத்திருக்கும்.

landscape printing : அகல வாக்கில் அச்சிடுதல்.

landscapes : லேண்ட்ஸ்கேப்ஸ் : நுண்கணினிகளுக்கான மைக்ரோ - சாஃப்ட் நிறுவனத்தின் மென்பொருள். கான்டூர் (Contour) படங்கள் மற்றும் அவை பிரதிபலிக்கும் இடங்களின் உறவைக் குறிப்பது.

language : மொழி : தகவலை வெளிப்படுத்தப் பயன்படும் விதிகள், குறியீடுகள், மரபுகளின் தொகுதி.

language access : மொழி அணுகல் : ஐ. பி. எம். நிறுவனத்தில் எஸ்ஏஏ ஏற்புடை கேள்வி மொழி. ஆங்கில மொழியில் கேட்கப்படும் கேள்வியை எஸ்கியூஎல் மொழியாக மாற்றி கியூ. எம். எஃப் ஆக அளிக்கிறது. கியூ. எம்எஃப் தரவுகளைத் தேடித் தருகிறது.

language and script : மொழியும் வரிவடிவும்.

language, assembly : தொகுப்பு மொழி;சில்லுமொழி; சிப்புமொழி.

language, basic : அடிப்படை மொழி.

language checker : மொழிச் சரி பார்ப்பி; மொழி திருத்தி.

Language, Common Business oriented : பொதுத் தொழில் சார்ந்த மொழி. COBOL மொழியின் விரிவாக்கப் பெயர்.

language description language : மொழி விவரிப்பு மொழி.

language, high level : உயர்நிலைமொழி.

language independent platform : மொழிசாராப் பணித்தளம்.

language, low level : அடிநிலை மொழி.

language, machine : பொறி மொழி.

language, object : இலக்கு மொழி.

language processor : மொழி செயலாக்கி; மொழி அலசி : மனிதன் எழுதும் மூல்மொழி நிரலாக்கத் தொடர்களை கணினி இயக்கக்கூடிய வடிவில் மொழிபெயர்க்கும் நிரலாக்கத்தொடர். பொதுவாக மொழி செயலாக்கிகள் மூன்று வகை. தொகுப்பிகள், சேர்ப்பிகள் மற்றும் மொழி பெயர்ப்பிகள்.

language prompt மொழி உணர்த்தி.

language, query : வினவு மொழி.

language, source : ஆதாரமொழி ; மூலமொழி

language statement : மொழி விவர அறிவிப்பு : மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் language subset

ஒருவர் குறியீடமைக்கும் சொற்றொடர். அது, செய்ய வேண்டிய ஒரு இயக்கத்தைக் குறிப்பிடலாம் அல்லது செயலாக்க நிரலாக்கத் தொடருக்கு அனுப்பவேண்டிய தரவுகளை மட்டுமே கொண்டதாக இருக்கலாம்.

language subset : மொழி துணைத் தொகுதி : ஒரு மொழியின் மற்ற பகுதியைச் சாராமல் சுயேச்சையாக இயங்கக்கூடிய, ஒரு மொழியின் பகுதி.

language tools : மொழியாளும் கருவிகள்.

language translation : மொழி பெயர்ப்பு : பேசிக்கிலிருந்து ஃபோர்ட்ரானுக்கோ அல்லது ஃபோர்ட்ரானிலிருந்து பாஸ்கலுக்கோ மொழி பெயர்ப்பு செய்வது போன்று ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குத் தரவுவை மாற்றும் செயல்.

language translator programme : மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர் : பொருளை மாற்றாமல் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு சொற்றொடர்களை மாற்றும் நிரலாக்கத் தொடர்.

LAN manager : லேடன் மேலாளர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 'லேன் இயக்க அமைப்பு. ஒரு பணியகத்தின் கீழ் ஒ/எஸ்2இல் பயன்பாடாக இயங்கி டாஸ் ஒ/எஸ்2 மற்றும் யூனிக்ஸ் வேலை நிலையங்ளுக்கு உதவுகிறது. கோப்பு பங்கிடுவதில் நுண் மென்கோப்புப் பங்கீட்டு வரை முறையை மைக்ரோசாஃப்ட் ஃபைல் ஷேரிங் புரோட்டோகால் பயன்படுத்துகிறது. போக்குவரத்து நுட்பத்திற்கு நெட் பயாஸ் (NET BIOS) வரை முறையைப் பயன்படுத்துவது டன் செயலாக்கத்திற்கிடையிலான தரவு தொடர்புக்கு பெயரிடப்பட்ட குழாய்களைப் பயன்படுத்துகிறது.

LAN network manager : லேன் பிணைய மேலாளர் : பிணையத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்த பிணைய நிர்வாகிக்குப் பயன்படும் ஐபிஎம் மின் அடையாள பிணைய நிர்வாகம். லேன் பிணைய மேலாளருக்குத் தேவையான தரவுகளைத் திரட்டித் தருகின்ற, பணி நிலைய சகாவாக லேன் நிலைய மேலாளரைக் கூறலாம்.

LAN requester : லேன் வேண்டுபவர் : வேலை நிலையத்திலேயே தங்கி இருக்கின்ற லேன் பணியக மென்பொருள்.

lansel mail bag : கையளவு மின் அஞ்சல் கருவி.

LANserver : லேன்பணியகம் : லேன்

மேலாளரின் ஐபிஎம் பதிப்பு.

LAN station : லேன் நிலையகம் : குறுபரப்பு இணையக் கட்டமைப்பில் (லேன்) பணியகம்.

LANtastic : லேண்டாஸ்டிக் : எளிதாக பயன்படுத்தக்கூடிய ஆர்ட்டி சாஃப்டின் பீ. சி. க்களுக் கான புகழ்பெற்ற நேருக்கு நேர் லேன் இயக்க அமைப்பு. ஈத்தர் நெட், ஆர்க்நெட் மற்றும் டோக்கன் ரிங் ஏற்பிகளையும் அதனுடைய முறுக்கிய இணை ஏற்பிகளையும் ஒரு நொடிக்கு இரண்டு மெகாபிட் அளவில் இது ஆதரிக்கிறது. மின் அஞ்சல் (இ-மெயில்) மற்றும் சாட் பணிகளும் இதில் உள்ளடக்கி மீமிகுதுண்மிகள் உள்ளது. குரல் அஞ்சல் மற்றும் உரையாடல் வசதியும்கூடுதலாகக் கிடைக்கும்.

LAP : லேப் : Line Access Protocol என்பதன் குறும்பெயர். இரண்டாம் நிலை (தரவு இணைப்பு நிலை) வரைமுறை.

Lap Computer : மடிக் கணினி : எடுத்துச் செல்லக்கூடிய பெட்டி யளவு அல்லது நோட்டுப்புத்தக அளவு கணினி. பொதுவாக சுமார் 5 கிலோவுக்குக் குறைவான எடை உள்ளதாக இருக்கும்.

laplink : லேப்லிங்க் : டிராவலிங் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பீ. சி. கோப்பு மாற்றல் நிரலாக்கத் தொடர். லேப்டாப் மற்றும் டி. டீ. பீ. கணினிகளுக் கிடையில் தரவுகளை இது மாற்றுகிறது. லேப்லிங்க் மேக், பீ. சி. க்கும் மேக்குக்கும் இடை யில் கோப்புகளை மாற்றுகிறது.

laptop : மடிக் கணினி . தட்டையான திரையுள்ள, எடுத்துச் செல்லக்கூடிய கணினி. பொதுவாக ஒரு டஜன் பவுண்டுக்குக் குறைவான எடை உடையது. ஏசி மின்சக்தி/பேட்டரியைப் பயன்படுத்துகிறது. வெளிப்புற திரையகத்து இணைப்புகளால் இணைக்கப்பட்டு டி. டீ. பீ. கணினியாகவும் செயல்படவல்லது. வெளிப்புற சி. ஆர். டி. மற்றும் முழு அளவு விசைப்பலகையுடன் இணைக்கலாம். மவுஸ் போர்ட், டிராக்பால் ஆகியவை உள்ளே அமைக்கப்பட்டிருக்கும். நின்றபிறகு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கக் கூடியது. வி. ஜி. ஏ. கிரே அளவும், வண்ணமும் உடையது. பேட்டரியில் இயங்கக்கூடிய 386 எஸ் அல்லது ஏஎம் 386 எக்ஸ் எல் ஆகிய மையச் செயலகங்களைக் கொண்டிருக்கும்.

laptop computer : மாடிக் கணினி

large icons : பெரிய சின்னங்கள்.

large main memories : பெரிய முதன்மை நினைவகம்; பெரிய முதன்மை நினைவு பதிப்பான்கள்

large model : பெரிய மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இந்த மாதிரியத்தில் ஆணைகள் மற்றும் தரவுகள் இரண்டுமே 64 கிலோ பைட்டுகளைவிட அதிக மாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்த்து 1 மெகா பைட்டுகளைவிடக் குறைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தரவு கட்டமைப்பும் 64 கிலோ பைட்டுகளைவிடக் குறைவாகவே இருக்க வேண்டும்.

Large-Scale Integration (LSI) : பேரளவு ஒருங்கிணைப்பு : (எல்எஸ்ஐ) : ஒரு சிலிக்கான் சிப்புவில் அதிக எண்ணிக் கையில் (பொதுவாக நூறுக்கு மேல்) ஒருங்கிணைந்த மின் சுற்றுக்களை வைக்கும் செயல் முறை.

Large Scale Integration Circuits (LCIC) : பேரளவுஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள்.

largest main frame computing capacity : உயர் ஆற்றல் பெரு முகக் கணினித் திறன்.

LASER லேசர் (சீரொளி; ஒளி ஒழுங்கமைவு) : Light Amplification by simulated Emission of Radiation என்பதன் குறும்பெயரே'லேசர். மின்காந்த அலைகளை கதிர்வீச்சு வெளியிடுவது போன்ற செயல் மூலம் பெரிதாக்கும் கொள்கையைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம். அகச்சிவப்பு புலனாகும் அல்லது அல்ட்ரா வய்லட் பகுதியில் இயங்குகிறது.

laser disk : ஒளிவட்டு; லேசர் வட்டு.

laser disk memory : லேசர் வட்டு நினைவகம் : 12 அங்குல (291 மி. மீ) பிளாஸ்டிக் வட்டில் லேசரால் தரவு பதியப்பட்டு, படிக்கப்படக் கூடிய வடிவில் உள்ள சேமிப்பக சாதனம். அண்மையில் உருவாக்கப்பட்டது.

laser font : லேசர் எழுத்துரு

laser jet : லேசர் ஜெட் : எச். பி. நிறுவனத்தின் டெஸ்க் டாப் லேசர் அச்சுப்பொறி குடும்பத் தைச் சேர்ந்தது. 1984இல் அறிமுகப்படுத்தப்பட்ட இது 300. டி. பி. ஐ. வரை அச்சிடும். 800 டி. பி. ஐ. வரை வேறொரு சாதனத்தினால் சக்தி கூட்டலாம். III வரிசையில் துல்லியம் அதிக மாகும். இதன் அச்சு கட்டளை மொழி பி. சி. எல். பிட்மேப் பிலான அச்செழுத்துகளை ஏற்றுக் கொள்கின்றன. அளவு கூடக் கூட அச்செழுத்துகள் சேர்க்கப்படுகின்றன. சிலவற்றை கார்ட்ரிஜ் மூலம் அமைக்கலாம். வரிசை II -ஐ

பிசிஎல் 5-ன் மூலம் மேம் படுத்தலாம்.

laser print : ஒளி அச்சு.

laser printer : லேசர் அச்சுப்பொறி :

ஒரு லேசர் கதிரைப் பயன்படுத்தி சுழலும் உருளையில் உருவங்களைப் பதிக்கும் அழுத்தம் தராத அச்சுப் பொறி. லேசர் தோன்றும் பகுதிகளில் மை துளை உருளை எடுத்துக் கொள்கிறது. உருளையின் மேல் உள்ள இப்பகுதிகள் அழுத்தப்பட்டு காகிதத்தில் கலந்து எழுத்துகள் உருவாகின்றன.

laser storage : லேசர் சேமிப்பகம்; லேசர் தேக்ககம் : உலோக மேற்பரப்பின் மேல் லேசர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி குறியீடு அமைக்கும் துணை சேமிப்பகச் சாதனம்.

laser writer : லேசர் எழுது பொறி : ஆப்பிள் நிறுவனத்தின் லேசர் அச்சுப் பொறி. மோட்டோ ரோலா 68020 சில்லினால் இயக்கப்பட்டு 2 மீமிகு எண்மிகளுடன் வருவது. .

last in first out : கடைபுகு முதல் விடு : ஒர் அடுக்கில் (stack) உள்ள உறுப்புகளைக் கையாளும் வழி முறை. ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கும் பொருள் களில் (சாப்பாட்டுத் தட்டுகள்) கடைசியாக பொருளைத்தான்முதலில் எடுப்போம். ஒரு சாரையில் (queue) இருக்கும் உறுப்புகளைக் கையாளும் (firstin firstout) மாறானது.

last modified : இறுதியாகத் திருத்தப்பட்டது. LAT : லேட் : Local Area Transport என்பதன் குறும்பெயர். டெக் நெட் சூழ்நிலையில் முகப்பு போக்குவரத்தினைக் கட்டுப் படுத்த டிஜிட்டல் நிறுவனம் உருவாக்கிய தரவு தொடர்பு வரைமுறை.

latch : லேட்ச் : புதிய தரவு அளிக்கப்படும்வரை அதன் அளவை உள்ளடக்கத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மின்னணு மின்சுற்று.

latch registers : லேட்ச் பதிவகங்கள் : ஒளிக்காட்சி தாங்கி யில் உள்ள குறிப்பிட்ட நினைவக முகவரியில் நான்கு எண்மிகள் அளவு தரவுவை வைத்துக் கொள்ளும் ஒரு எண்மி லேட்ச் பதிவகங்கள் ஈ. ஜி. ஏ. வில் நான்கு உள்ளன. தாங்கி (Buffer) யில் இருந்து மையச் செயலகம் படிக்கும்போது, லேட்ச் பதிவ கங்கள் நிரம்புகின்றன. தாங்கியில் மையச் செயலகம் எழுதும் போது லேட்ச் உள்ளடக்கங்கள் அது தொடர்பான நினைவக

இருப்பிடத்தில் திணிக்கப்படுகின்றன.

latch voltage : லேட்ச் வோல்டேஜ் அளவை நிலையை ஏற்றம் இறக்கம் (flip-flop) மாற்றக் கூடிய உள்ளீடு மின்சக்தி.

late binding : தாமத ஒட்டு : ஓடும் போதே வாலாயங்களை (ரொட்டீன்) இணைப்பது.

latency : உள்ளுறை சுணக்கம் : தட்டு அல்லது உருளை போன்ற துணை சேமிப்பக சாதனத்தில் நேரடி அணுகு முறையில் ஒரு பதிவை எழுதவும், படிக்கவும் ஆகும் சுழற்சி தாமதம்.

latent image : தெரியாத உருவம் : மின்சக்தி மூலம் தோன்றும் புலனாகாத உருவம். சான்றாக, நகல் எந்திரத்தில், ஒரு பக்கத் தின் தெரியாத உருவத்தை ஒரு பலகையிலோ அல்லது உருளையிலோ மின்சக்தி வடிவில் உருவாக்கி வைக்கப்படும்.

latest : அண்மை.

latex or Latex : லேட்டெக்ஸ் : லெஸ்லி லேம்போர்ட் (leslie lamport) நிறுவனம் டெக்ஸ் (TeX) தொழில் நுட்பத்தின் அடிப் படையில் அமைத்த ஒர் ஆவண உருவாக்க மென்பொருள். உரைப்பகுதியின் தலைப்பு, உள்ளடக்கம் போன்று உரை உறுப்புகளுக்குரிய மிக எளிய கட்டளைகள் மூலம் ஆவணத் தின் தோற்றத்தைக் காட்டிலும் ஆவண உள்ளடக்கத்தை முன் னிலைப்படுத்த லேட்டெக்ஸ் உதவுகிறது.

latter quality : எழுத்துத் தரம்.

latter quality mode : எழுத்துத் தர முறை.

latter quality printer : எழுத்துத் தர அச்சடிப்பான்.

lattice : லேட்டிஸ் : பூலியன் அல்ஜீப்ரா போன்ற அல்ஜீப்ரா அமைப்பு.

launch : துவக்கு : ஒரு நிரலாக்கத் தொடரை ஏற்றி ஒடச் செய்வது.

launcher : ஏவி, தொடக்கி : மேக்சஎஸ் இயக்க முறைமையில், அடிக்கடி பயன்படுத்தக்கூடிய பயன்பாடுகளையும், நிரல்களையும், பயனாளர் ஒற்றைச் சுட்டிச் சொடுக்கில் இயக்க வகை செய்யும் ஏவு நிரல்.

. la. us : எல். ஏ. யு. எஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக் காவின் லூசியானாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக்களப் பெயர்.

layer : அடுக்கு : 1. வரைபட முறை கோப்பில் அளவை முறையிலான தொடர்பில் தரவுகளின் துணைத் தொகுதி. 2. முப்பரிமாண வரிசையில் மூன்றாவது பரிமாணம்.

layered interface : அடுக்குநிலை இடைமுகம் : கணினி வன்பொருளுக்கும் அதில் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளுக்கும் இடையே ஒன்று அல்லது மேற்பட்ட நிலைகளில் இருந்து செயல்படக்கூடிய நிரல்கூறுகள். முடிக்க வேண்டிய பணிகளுக்கேற்ப எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும். பயன்பாட்டையும் அது செயல்படும் வன்பொருளையும் நேரடித் தொடர்பின்றி பிரிப்பதே அடுக்குநிலை இடைமுகத்தின் நோக்கம். முடிவில் இதுபோன்ற இடைமுகம், ஒரு நிரலை வெவ்வேறு வகைக் கணினிகளில் இயங்கச் செய்வது சாத்தியமாகும்.

layered panel : அடைக்கும் பாளம்

layering : அடுக்கமைத்தல்; அடுக்கு ஒரு தனி ஒவியத்திற்குள் வரைபடமுறை தரவுகளின் துணைக் குழுக்களைத் தொடர்பு படுத்தும் அளவைமுறைக் கோட்பாடு. மிகச் சிக்கலான கோப்பின் அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதன் மூலம் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க, கணினியில் வேலை செய்யும் பகுதிகளை மட்டுமே பார்க்க இது அனுமதிக்கிறது.

layout : வெளிப்புற அமைப்பு : இட அமைவு : ஒட்டு மொத்த வடிவமைப்பு அல்லது திட்டம் கணினி அமைப்பு, ஒடு படம், திட்ட வரைபடங்கள், அச்சுப் பொறிக்கான வடிவமைப்பு, அட்டைபத்திகளின் வெளி யீட்டு வடிவமைப்பு, ஒரு ஆவணம் அல்லது புத்தகத்தின் வெளி அமைப்பு போன்றது.

layout forms and screens : வடிவமைப்புப் படிவங்களும், திரைகளும் : படிவங்கள் மற்றும் உள் ளீடு/வெளியீடு ஊடக உள்ளடக்கம் மற்றும் முறைகளை உருவாக்குவதற்கான கருவிகள். காட்சித் திரைகள் மற்றும் அறிக்கைகள் இவற்றுக்கு சான்று.

layout setting : பக்கம் அளத்தல் : ஒரு அச்சிடப்படும் பக்கத்தை அமைப்பதற்கான மதிப்புகளை அளித்தல். ஒரங்கள், பத்தி அளவு, மேற்பகுதி, கீழ்ப்பகுதி, தலைப்புகள், பட்டியல்கள் ஆகியவை இதற்கு எடுத்துக் காட்டுகள்.

layout sheet : வெளியமைப்புத் தாள்; அமைவுத்தாள் : நிரலாக்கத் தொடர் திட்டமிடலுக்காக காட்சித்திரையில் உள்ளதைக் காட்ட வடிவமைக்கப்பட்ட காகிதத் தொகுதி. வரைபட முறை எக்ஸ்-ஒய் ஒருங் கிணைப்புகள் மூலம் அல்லது வரிசைகள், பத்தி கள் முறையில் சொற்கள் வரைபடங்களைக் காட்டுதல்.

layout, character : எழுத்து உருவரை.

lazy evaluation : செம்மல் மதிப்பாய்வு : மடி மதிப்பாய்வு : தேவையானபோது மட்டும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மதிப்பாய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு நிரலாக்க நுட்பம். மிகப் பெரிய அட்டவணைகள் மற்றும் பட்டியல்கள் போன்ற தரவு கட்டமைப்புகளை சரியான நேரத்தில் திறன்மிக்க முறையில் கையாள்வதற்கு மடி மதிப்பாய்வு முறை உதவுகிறது.

. lb : . எல்பி : ஓர் இணையதள முகவரி லெபனான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. lc : . எல்சி : ஓர் இணையதள முகவரி செயின்ட் லூசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

LCD : எல். சி. டி : Liquid Crystal Display என்பதன் குறும்பெயர். சிறப்பு படிகப் பொருளின் மீது ஒளி யைப் பிரதிபலிப்பதன் மூலம் எழுத்து களும் எண்களும் தெரியும் அமைப்பு. அதிக ஒளி இருக்கும்போது மிக நன்றாகத் தெரியும். குறைந்த வெளிச்சத்தில் சரியாகப் பார்க்க முடியாது. அதன் குறைவான அளவின் காரணமாக, பாக்கெட் கணிப்பான்கள், கணினிகள், பெட்டி கணினிகள், விசைப் பலகைகள், கடிகாரங்கள் மற்றும் பல சாதனங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

LCD panel : எல். சி. டி. பேனல் : மேற்செலவு திட்டத்தில் ஒவர் ஹெட் புரொஜக்டரில் வைக்கக் கூடிய, உள்ளே தெரியும் படிகத் திரையில் காட்டு கின்ற கணினி வெளியீட்டை ஏற்றுக்கொள்ளும் தரவு திட்டம்.

LCD printer : எல். சி. டி. அச்சுப்பொறி : மின் புகைப்பட முறை அச்சுப்பொறி. அது திரவ படிக மூடிகள் இயக்குகின்ற தனி ஒளி மூலத்தைப் பயன்படுத்துகிறது.

LCD projector : எல். சி. டி. படப்பெருக்கி : நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி மூலம் பெரிய திரையில் படமாகக் காட்டும் கருவி. LCD watch : எல். சி. டி கடிகாரம் : திரவ படிவ காட்சித்திரை கடிகாரம். வரி கட்டுப்பாடு வரையறுப்பது.

LDL : எல்டிஎல் : Language Description Language என்பதன் குறும்பெயர். ஒரு மொழியைப் பற்றி விவரிக்கும் பெருமொழி.

lead : லீட் : ஒரு மின் சுற்று அம்சத்தின் இணைப்பு.

leaded chip carrier : வீட்டு சிப்பு இடை நினைவகம் : நான்கு பக்கங்களிலும் இணைப்புகளைக் கொண்டுள்ள சதுர சில்லு. (டி. ஐ. பியை விட அதிக உ/வெ பாதைகளைத் தருவது).

leader : முன்னோடி தலைப்பு : ஒரு சுருணை காந்த நாடா அல்லது காகித நாடாவில் ஆரம்பத்தில் உள்ள நாடாவின் வெற்றுப் பகுதி.

lead frame : முக்கியப்படம் : ஒரு ஐ. சி. யில் உள்ள லீடை வைத்துக் கொள்கின்ற லீட் அசெம்பிளி யின் பகுதி. படம் எடுத்த பிறகு அது போய்விடும்.

leading : முன்பகுதி; வரி இடைவெளி : ஒரு வரி அச்சின் அதிக பட்ச கீழ் அளவுக்கும் அடுத்த வரியின் அதிக பட்ச மேல் அளவுக்கும் இடையில் உள்ள செங்குத்து இடைவெளி

leading edge : முன்பக்க விளிம்பு; தலைப்பு முனை : 1. படிப்பியின் அட்டையில் முதலில் நுழையும் துளையிட்ட அட்டையின் விளிம்பு. Trailing edge-க்கு எதிர்ச் சொல். 2. ஒளி நுண்ணாய்வில், படி நிலையில் முதலில் நுழையும் ஆவணம் அல்லது பக்கத்தின் விளிம்பு. 3. தொழில் நுட்பத் தலைமையை உணர்த் தும் அடைமொழிச் சொல்.

leading zeros : முன்னுள்ள பூஜ்யங்கள். தகவலின் எண் மதிப்பைக் கூட்டாத புலத்தை நிரப்பும் பூஜ்யங்கள். சான்றாக, 0001234 என்ற எண்ணில் உள்ள அனைத்து பூஜ்யங்களும் முன்னுள்ள பூஜ்யங்களாகும்.

lead ion battery : ஈய அணியின் மின் கலன் : மின்சக்தியைச் சேமித்து வைக்கும் சாதனம். வேதியல் சக்தியை மின்சாரச் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அமில ஊடகத்தில் ஒரு முனையிலிருந்து இன்னொருமுனைக்கு அயனிகள் பாய்கையில் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

leadless chip carrier : லீட்லஸ் சிப்பு இடைநினைவகம் : நான்கு பக்கங்களிலும் இணைப்புகள் உள்ள தட்டையான சதுர சிப்பு இருக்கும் இடம்.

leaf : இலை : மர வரைபடத்தின் முனையப் பகுதி.

leaf nodes : இலை முனைகள் : பிள்ளைகள் இல்லாத ஒரு மரத்தில் உள்ள முனைகள். இணையத்துக்குத் தொடர்புள்ள இதனை இணைய மொழியில் சொல் வதானால் இணைப்புகள் இல்லாத ஆவணங்கள் எனலாம்.

leapfrog test தாண்டும் சோதனை : சேமிப்பு ஊடகம் முழுவதும் தன்னை இரட்டித் துக் கொள்ளும் சேமிப்பகம் கண்டறியும் நிரல்.

learning curve : கற்கும் வளைவு : ஒரு குறிப்பிட்ட பணியில் தொடரும் பழக்கத்திற்கு அதன் விளைவாக ஏற்படும் திறமை, வேகம், துல்லியம் போன்ற வற்றுக்கும் இடையில் உள்ள உறவைக் காட்டும் வரைபடம். அனுபவ வளைவு என்றும் சில சமயம் கூறப்படும். சுலபமாகக் கற்கும் வளைவு அல்லது'நீண்ட கற்கும் வளைவு' என்று மென் பொருளைப் பயன்படுத்துபவர்கள் பேசுவதுண்டு.

learning partner programme : கல்விப் பங்காளர் நிரல்; கல்விப் பங்காளர் நிகழ்ச்சி.

learning programme : கற்கும் நிரல் தொடர் : தகுதியுள்ள எதிர்ப்புகளுடன் பல போட்டிகளைச்சந்தித்து தன் திறமையை படிப்படியாக மேம்படுத்தும் கணினி நிரல்

lease : குத்தகை : கணினி முறைமை ஒன்றைப் பயன் படுத்தும் உரிமையைப் பெறும் வழி. குத்தகை ஒப்பந்தத்துக்கு முதலீடு எதுவும் தேவை இல்லை. வாடகைக்கு கணினி முறைமையை எடுப்பதை விட செலவு குறைவானது.

leased line modem : குத்தகை இணைப்பு மோடெம் : தனியார் தொடர்புகளில் பயன்படுத்தும் அதிவேக மோடெம். டயல் செய்யும் இணைப்புகளுக்காக குறைந்த வேகத்தில் இயங்கும் மாற்று ஏற்பாடும் அதனிடம் இருக்கும்.

leased lines : குத்தகைஇணைப்புகள் : பொதுவான அமைப்பு ஒன்றிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட தகவல் தொடர்பு இணைப்புகள். துவக்கப்படாத இணைப்புகள் மற்றும் பிணைப்பு இணைப்புகள் என்று அழைக்கப்படும்.

leasing companies : குத்தகை நிறுவனங்கள் : குத்தகைக்கு அளிக்கும் நிறுவனங்கள். கணினிச் சாதனங்களை தயாரிப்பாளர் ஒருவரிடமிருந்து வாங்கி குத்தகைக்கு தருவதை சிறப்பாகக் கையாளும் நிறுவனங்கள்.

least significant bit : மீக்குறை மதிப்புத்துண்மி : ஒன்று அல்லது மேற்பட்ட பைட்டுகள் கொண்ட ஒர் இரும எண்ணில் குறைந்த மதிப்பு (value) உள்ள துண்மி (பிட்) பொதுவாக வலது ஒரத்தில் உள்ளது.

least significant byte (LSB) : சிறும மதிப்புள்ள எண்மிகள் : எழுத்துகள் வரிசையின் தொகுதி ஒன்றில், வலது பக்கத்தில் அதிக தூரத்தில் உள்ளதே குறைந்த முக்கியத்துவம் கொண்டது.

least significant character : மீக்குறை மதிப்பு எழுத்து : ஒரு சரத்தில் வலது ஒரத்தில் உள்ள எழுத்து. எல்எஸ்சி (LSC) என்பது தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

Least Significant Digit : (LSD) : குறைந்த முக்கியத்துவமுடைய எண் : குறைந்த மதிப்பு அல்லது முக்கியத்துவம் உடைய எண். 58371 என்ற எண்ணில் குறைந்த முக்கியத்துவம் உடைய எண் 1.

LED : Light Emitting Diode என்பதன் குறும்பெயர். சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஆல்பா எண் வெளியீட்டு அலகு. குறிப்பிட்ட வோல்டேஜ் உள்ள மின் சாரம் அனுப்பப்பட்டால் ஒளிரக் கூடியது.

LED display : எல்இடி திரை, சில கணிப்பான்கள், இலக்கமுறை கடிகாரங்கள் போன்றவற்றில் எண்கள் மற்றும் அகரவரிசை எழுத்துகளைக் காட்டும் சாதனம்.

led printer : எல்இடி அச்சுப்பொறி : ஒளி உமிழ் இருமுனைய அச்சுப் பொறி என்று பொருள்படும் Light Emitting Diode Printer group தொடரின் சுருக்கச் சொல். எல்இடி, லேசர், எல்சிடி அச்சுப் பொறிகளின் முக்கியமான வேறுபாடு ஒளி மூலம் ஆகும். எல்இடி அச்சுப்பொறிகளில் ஒளி உமிழும் இருமுனையங்களின் (Diodes) கோவை (Array) பயன் படுத்துகின்றன.

left . இடது : ஒரு வாக்குவாத சரத்தின் இடது புறத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பிட்ட நீள முள்ள சரத்தை திருப்பி அனுப்புகின்ற பணி.

leftarrow : இடது அம்புக் குறி.

left justification : இடது ஓரச்சீர்மை : சொல்செயலி, கணினிப் பதிப்பகப் பணிகளில் உரை யைத் தட்டச்சு செய்து, இடப்புற ஒர இடைவெளியை ஒட்டி ஒரு சீராக வரிகளை அமைத்தல். வரிகளின் வலப்புற ஓரங்கள் சீராக இருப்பதில்லை.

left justified : இடப்புற ஓரச் சீர்மை.

k•ftjustity : இடப்புறநேர்த்தியாக்கு.

left shift : இடம்பெறும் மாற்று : இடதுபுறத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு பதிவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு துண்மியையும் மாற்றச் செய்தல்.

legacy : மரபுரிமை; மரபுவழி : கொஞ்ச காலத்துக்கு முன்பு நிலவிய ஆவணங்களை அல்லது தரவுகளைப் பற்றியது. ஒரு செயலாக்கத்தில் அல்லது தொழில்நுட்பத்தில் ஏற்படுத்துகிற ஒரு மாற்றத்தைக் குறிப்பாக உணர்த்துகிறது. இந்த மாற்றத்தின் காரணமாக, பழைய தரவு கோப்புகளைப் புதிய முறை மைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.

legacy data : மரபுவழித்தரவு : ஒரு நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு இன்னொரு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக் கொள்ளும் நிறுவனம், இருக்கும் தரவுவை மரபுரிமையாக தகவலின் முந்தைய உடைமையாளரிடமிருந்து பெறுகிறது.

legacy hardware : பேற்றுவன் பொருள்

legacy system மரபுவழி முறைமை : ஒரு வணிக நிறு வனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள், கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்கும். புதிய பதிப்புகளை நிறுவும் போது மரபுவழி முறைமைகளுடன் ஒத்திசைவு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். (எ-டு) இருக்கின்ற வணிகப் பரிமாற்ற விற்று வரவு ஏடுகளை, புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விரிதாள் மென்பொருள், செல வும் நேரமும் அதிகம் எடுத்துக் கொள்ளும் புதிய வடிவ மாற்றம் எதுவுமின்றி ஏற்றுக் கொள்ளுமா? பெரும்பாலான மரபு வழி முறைமைகள் பெருமுகக் கணினி அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இப்போது பெரும்பாலான நிறுவனங்களில் அவை கிளையன்/வழங்கன் கட்டுமானம் மூலம் மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன.

legend : படக்குறிப்பு : ஒரு வரை கலைப் படத்தின் அடியில் அதனை விளக்கி விவரிக்கும் உரைப்பகுதி. ஒரு வரைபடத்தில் அல்லது இயல் படத்தில் படக்குறிப்பு என்பது வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தோரணி அல்லது குறியீடுகளை விளக்குவதாக இருக்கும்.

Leibniz : லீப்னிஷ் : கோர்டிஃ பிரைடுவான் (1646-1716) ஜெர் மானிய கணித வல்லுநர். கணக்கிடும் எந்திரத்தை 1672 இல் கண்டுபிடித்தார். அந்த எந்திரம் கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆகிய வேலைகளைச் செய்யக் கூடியது.

Leibniz's calculator : லீப்னிஷ் கணிப்பி. கோட்ஃபிரைடு வான்-லீப்னிஷ் என்பவர் வடிவமைத்த கணக்கிடல் பொறி. பாஸ்கலின் கணிப்பிபோல கூட்டல், கழித்தல் செய்யவல்லது. கூடுதல் பற்சக்கரங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் நேரடியாக பெருக்கல் வேலையையும் செய்யக் கூடியது.

Lempel Ziv : லெம்பெல் சிவ் : ஏற்ப்புடை சுருக்கும் நுட்பத்தினைப் பயன்படுத்தும் தரவு சுருக்கும் அல்கோரிதம்.

lempelziv algorithm : லெம்பெல் சிவ் படிமுறை : தரவு கோப்புகளை அவற்றின் உள்ளடக்கத்திற்குப் பங்கமின்றி அளவினைச் சுருக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணிதப் படிமுறைத் தருக்கம்.

len : லென் : ஒரு சரத்தின் நீளத்தைத் திருப்பி அனுப்பும் கட்டளை. LEN (JUNE) என்ற கட்டளை4 என்ற விடையைத் தரும்.

length : நீளம் : எழுத்துகளுக்கான எண்மிகள் எண்ணிக்கை அல்லது கணினி சொல் ஒன்றில் உள்ள துண்மிகள். ஒரு மாறும் சொல் பல எழுத்துகளால் ஆனது. ஆனால் சிறப்பு முடிவு எழுத்தைக் கொண்டது. நிலையான சொல் என்பது ஒரே எண்ணுள்ள துண்மிகளால், அல்லது எண்மிகளால் அல்லது ஒவ்வொரு சொல்லிலும் உள்ள எழுத்துகளால் ஆனது.

length, block : தொகுப்பு நீளம்; தொகுதி நீளம்.

length, fixed block : மாறாத் தொகுதி நீளம்.

length, record : ஏட்டின் நீளம்.

length record, fixed : மாறாநீள ஏடு .

Leo : லியோ ; லியோன்ஸ் எண்ணும் இங்கிலாந்து நிறுவனம் உருவாக்கிய லியோனின் மின்னணு அலுவலகம் என்பதன் சுருக்கம். 1947இல் துவக்கிய ஒரு திட்டத்தின்படி அவர்கள் அலுவலகத்தின் எழுத்தர்கள் செய்யும் வேலைகளை கணினி மூலம் செய்ய கணினியை உருவாக்கினார்கள்.

Leo-III : லியோ-III : அதன் காலத்திற்கு மிகவும் முன்னேறிய வணிக எந்திரமான முதல் தலை முறை கணினி.

less than : விடக் குறைவு : குறைவாக, சமமற்ற இரு மதிப்பீடு களுக்கிடையிலான உறவு. குறியீட்டின் முனைப் பகுதி சிறிய எண்ணைச் சுட்டுவதாக இருக்கும். 3 less than 8 StaölpTab 3 எனும் எண் எட்டைவிடக் குறைவானது என்று பொருள். ஒப்பீட்டில் மாற்று வகைப்படுத்துதலைத் தீர்மானிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

less time : குறைந்த காலம்.

letter : எழுத்து; மடல்.

letter bomb : கடிதக்குண்டு : பெறுபவரின் கணினியைச் சீர்குலைக்கும் எண்ணத்துடன் அனுப்பப்படும் ஒரு மின்னஞ்சல் செய்தி. கடிதத்துடன் மறைந்துவரும் சில கட்டளைக் குறியீடுகள் பெறுபவரின் கணினியிலுள்ள கோப்புகளை முடக்கிவிடலாம். சில வேளைகளில் நச்சுநிரல் (virus) மடலில் மறைந்திருக்கலாம். பெறுபவரின் கணினியில் மறைந்திருந்து தாக்கும் ட்ரோஜான் குதிரை நச்சு நிரலாக இருக்கலாம். சில வேளைகளில் மடலின் செய்தியே மிகப்பெரிதாக இருந்து அஞ்சல் பெட்டியை நிரம்பி வழியச் செய்யலாம்.

letter quality : அச்சுத் தரம்;அச்சு நேர்த்தி, எழுத்துத் தரம் அச்சிடப்பட்ட படி (பிரதி) ஒன்றின் உயர்தரம் தொடர்பானது. சிறந்த தட்டச்சுப் பொறி ஒன்றில் பெறப்பட்டதுடன் ஒப்பிடக் கூடியது.

letter quality mode : எழுத்துத் தர முறை.

letter quality printer : எழுத்துத் தரமுள்ள அச்சுப்பொறி ;எழுத்துத் தர அச்சடிப்பி : சாதாரணதாளில் தெளிவான பிசிறற்ற எழுத்துகளை உருவாக்கும் அச்சுப் பொறி. பொதுவான அச்சுப் பொறி ஒன்று டெய்சி வடிவுள்ள சக்கரம் ஒன்றைப் பயன்படுத்து கிறது. அதில் எழுத்துகள் வளையக்கூடிய தண்டுகளின் முனையில் உள்ளன. சக்கரம் உயர்வேகத்தில் சுழலும்பொழுது அச்சிடு முனை பக்கத்தின்மீது நகர்கிறது. சுத்தி ஒன்று பொருத்தமான எழுத்துகளின் மீது அடிக்கிறது. அதன் மூலம் சிறந்த தட்டச்சுப்பொறியில் கிடைப்பதை விட தனித்தனியான நேர்த்தியான எழுத்துகளைக் கொண்ட உரை கிடைக்கிறது. இந்த வகை அச்சடிப்பிகளில் சில டெய்சி சக்கர முறைக்குப் பதிலாக கோல்ப் பந்து அச்சிடும் பொறியமைப்பைப் பயன்படுத்துகின்றன.

letter shift : எழுத்து உயர்த்தி : விசைப்பலகை விசை அல்லது விசையினால் உருவாக்கப்படும் குறியீடு. இது அடுத்து வரும் வடிவங்களை மற்றொரு வடிவு உயர்த்தித் தோன்றும் வரை எழுத்துகளாகப் படிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.

letter translation : எழுத்து மொழி மாற்றம்.

level : நிலை;படித்தளம்; படி நிலை; படிவம் : ஆதிக்க முறை ஒன்றில் அடிபணியும் அளவு. மரம் ஒன்றின் வேருக்கும் அதன் கணுவுக்கும் இடையே உள்ள இடைவெளி.

level, access : அணுகு மட்டம், அணுகுநிலை.

level address, zero : பூச்சிய நிலை முகவரி : அடிநிலை முகவரி.

level language, high : உயர்நிலை மொழி.

level language, low : அடிநிலை மொழி.

lex : லெக்ஸ் : ஒரு மொழிபடிவத்திலிருந்து வேறொரு மொழிக்கு தரவுகளை மாற்றும் தரவு மாற்றல் மென்பொருள்.

lexical anayIsis : சொல்லாக்க ஆய்வு : ஒரு நிரலாக்கத்தொடர் சொற்றொடரின் பல்வேறு பகுதிகளைத் தொகுப்பி அடையாளம் காணும் செயல்முறை.

lexicographic sort : சொல்லாக்க வகைப்படுத்தல் : அகராதியைப்போன்று அகர வரிசையில் வரிசைப்படுத்துதல். அகர வரிசை சொற்களின் மூலம் எண்கள் அமைக்கப்படும்.

lexicon : பேரகராதி : பேரகரமுதலி : எல்லாச் சொற்களுக்கும் விளக்கமளிக்கும் நூல்.

lexicon analyser : சொற் பகுப்பான்.

LF : எல்எஃப் : Line Feed என்பதன் குறும்பெயர்.

LHA : எல்எச். ஏ. : விரைவான, திறன்மிக்க இலவசமாகக் கிடைக்கும் கோப்பு சுருக்கும் பயன்பாடு.

|haro : லாரோ : ஹாருயாக யோஷி சாகி உருவாக்கிய புகழ் பெற்ற இலவச சுருக்கும் நிரல் தொடர். L2W (L277) அகராதி முறையில் மாற்றம் செய்து பயன்படுத்தி ஹஃப் மேன் குறியீட்டு நிலையைத் தொடர்கிறது. பீ. சி., யூனிக்ஸ் மற்றும் பிற தளங்களிலும் இது இயங்க முடிவதன் காரணம் இதன் மூலம் குறியீடு இலவசமாகக் கிடைக்கிறது.

librarian : நூலகர் : 1. தொழில் நுணுக்க ஆவணங்களைப் பராமரிக்கும் பொறுப்பாளர்; நிரல் தொகுப்புகளை உருவாக்குவோர்; இயக்குவோர் மற்றும் பிற ஊழியர்கள் பயன்படுத்தும் விளக்கத் தொகுப்புகளைப் பராமரிப்பவர். 2. எல்லா கணினிக் கோப்புகள் அதாவது தகட்டுக் கற்றைகள் மின்காந்த நாடாக்களை பாதுகாப்பாக வைத்திருப்பவர். காப்பாளர், கோப்பு நூலகர், மென் பொருள் நூலகர், நாடா நூலகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

library : நூலகம் : வெளியான நிரலாக்கத் தொகுப்புகள், வழக்கமான செயல்கள், எப்பொழுதாவது நிறைவேற்றப்படும் பணிகள் ஆகியவைகள் கணினியைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் இடம். நிரலாக்கத் தொகுப்பு நூலகம் போன்றது.

library automation : நூலகத்தானியக்கம் : நூலக நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு கணினி மற்றும் பிற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்துதல்.

library function : உள்ளிணைப்பு செயற்கூறு;நூலகச் செயற் கூறு.

library manager : நூலக மேலாளர் : ஒரு இயக்க முறைமையில் சேமிக்கப்பட்ட நிரல் தொகுப்புகளைப் பராமரிக்கும் நிரலாக்கத் தொகுப்பு.

library routine : நூலக வாலாயம் : நிரலாக்கத் தொகுப்பு நூலகம் ஒன்றில் கையாளப்படும் சோதிக்கப்பட்ட வழ்மை அல்லது நிரல்.

. lib. us : லிப். யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி, அமெரிக்க நாட்டிலுள்ள ஒரு நூலகத்துக்குரியது என்பதைச் சுட்டும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

licence policy : உரிமக்கொள்கை .

licence agreement உரிம ஒப்பந்தம் : ஒரு மென்பொருள் விற்பனையாளருக்கும் ஒரு பயனாளருக்கும் இடையேயான ஒரு சட்ட ஒப்பந்தம். மென்பொருள் தொடர்பாக பயனாளருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் இந்த ஒப்பந்தம் குறிப்பிடும். இந்த உரிம ஒப்பந்தம் பயனாளர் மென்பொருள் தொகுப்பை பிரிக்கும்போதே நடைமுறைக்கு வந்துவிடுகிறது.

license contrast : உரிம எதிர்மறை : மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்துவோர் அதனைத் தன்னுடைய கணினியில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கும் சிறுதாள்.

licensing key : உரிம விசை; உரிமத் திறவி, உரிமத் திறவு கோல் : உரிமம் பெற்ற ஒரு மென்பொருளை நிறுவும்போது, நுழைசொல்லாகப் பயன்படும் ஒரு சிறிய எழுத்துச் சரம். உரிமம் பெற்ற மென்பொருளை சட்டத்துக்குப் புறம்பாக நகலெடுப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் உரிமத் திறவு கோலான இந்நுழை சொல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக பயன்படுத்தப்படுகிறது.

life cycle : வாழ்க்கைச் சுழற்சி; ஆயுள் சுழற்சி : நிரல் தொகுப்பு அல்லது முறைமை ஒன்றின் தோற்ற வழி. துவக்கக் கருத்து, உருவாக்கம், அமல் மற்றும் மாற்று ஒன்று உருவாக்கப்படும் வரை அல்லது இனிமேல் பயன்படாது என்ற நிலை ஏற்படும் வரை பராமரிப்பு.

life testing : ஆயுள் சோதனை; வாழ்க்கைச்சோதனை : களத்தில் நம்பகத் தன்மையை உறுதி செய்ய மின்னணு பாகங்களை விரைந்து சோதித்தல்.

LIFO : லிஃபோ : Last In First Out என்பதின் குறும்பெயர். இம்முறையில் தான் பெரும்பாலான நுண்வகைப்படுத்தி நிரல் தொகுப்பு முறைமைகள் செயல்படுகின்றன. கடைசியாக அனுப்பப்பட்ட தரவு அல்லது கட்டளை நிரல் தான் முதலில் பெறப்படுகிறது.

ligature : லிகாச்சர் : (உடலால் தொடக்கூடிய) தனி அலகாக வடிவமைக்கப்பட்ட இரண்டு அல்லது மேற்பட்ட தட்டச்சு முக எழுத்துகள்.

light dots : ஒளிப்புள்ளிகள்.

light emitting diode : ஒளியுமிழ் இரு முனையம் அதற்கு மின்சக்தி அளிக்கப்படும்போது

ஒளியுமிழ் இருமுனையம்

ஒளியுமிழ் இருமுனையம்

ஒளியை உமிழும் ஒரு மின்னணு சாதனம். 'மின்சாரம் இயங்குகிறது என்பதை உணர்த்தும் குறியீடுகளாக கணினிகளிலும் கணினி மென்பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

lightest : மிகு ஒளிர்மை, மிகவும் லேசான.

light guide : ஒளி வழிகாட்டி;ஒளி வழிப்படுத்தி : ஒளி இழைக் கம்பி போன்ற ஒளியைக் கடத்த வடிவமைக்கப்பட்ட கம்பி.

lighting : வெளிர்மை : Olsu6flisou : ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் உள்ள ஒளி அல்லது இருள். light pen : ஒளிப்பேனா : ஒரு உள்ளீட்டு சாதனம். கணினித் திரையுடன் இணைக்கப்பட்ட ஒர் எழுத்தாணி. இந்த எழுத்தாணியைக் கொண்டு திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள

சின்னங்களைச் சுட்டி, எழுத்தாணியின் பக்கவாட்டிலுள்ள ஒரு விசையை அழுத்தித் தேவையானதைத் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்தாணியால் திரைப்பரப்பைத் தொட்டுத் தேர்வு செய்யலாம். இது, சுட்டி மூலம் தொட்டுச் சொடுக்குவதற்கு இணையானது.

light sensitive : ஒளி உணர்;ஒளி உணரி.

light sensitive screens : ஒளியுணர்வுத் திரைகள்.

lightsource : ஒளி மூலம்;கணினி வரைகலையில் வருவது. முப்பரிமாண பொருளின்மீது ஒளியின் விளைவை போலியாக உரு வாக்க பயன்படுத்தப்படுகிறது. சில நிரல் தொடர்களில் பல் ஒளி மூலங்களைக்கணிப்பிடமுடியும்.

lightwave system : ஒளி அலை அமைப்பு : மிக அதிக வேகத்தில் ஒளி இழைகள் மூலம் ஒளித் துடிப்புகளை அனுப்பும் சாதனம் (நொடிக்கு ஜி-பிட்வரிசை). நகரங்களுக்கிடையிலான தொலைபேசி இணைப்புகள் ஒளி அலை அமைப்புகளாக மாற்றப் பட்டுள்ளன.

Light Weight Directory Access Protocol : குறைச்சுமை கோப்பக அணுகு நெறிமுறை : இது ஒரு பிணைய நெறிமுறை. டீசிபீ/ ஐபீநெறிமுறையுடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப் பட்டது. எக்ஸ்-500 போன்ற படிநிலைக் கோப்பகங்களில் தகவலைத் தேடிப் பெறப் பயன்படுகிறது. கணினியிலுள்ள தரவு குவிப்பைத் தேடி பயனாளர் பெயர், மின்னஞ்சல் முகவரி, பாதுகாப்புச் சான்றிதழ் அல்லது தொடர்புக்கான பிற தகவல் இவை போன்ற ஒரு குறிப்பிட்ட தகவல் குறிப்பைப் பெறுவதற்கான ஒற்றைக் கருவியை இந்த நெறிமுறை பயனாளர்களுக்கு வழங்குகிறது.

Light Weight Internet Person Schema : குறைச்சுமை இணைய நபர் திட்ட வரை : குறைச்சுமைக் கோப்பக அணுகு நெறிமுறையில், பயனாளர் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தகவலைப் பெற்றுத் தருவதற்கான வரன்முறை.

LILO : Last in Last out என்பதற்கான குறும்பெயர். வரிசைப் பட்டியல் அல்லது ஒன்றிலிருந்து கடைசியாக இடப்பட்டதை கடைசியாகப் பெறும் சேமிப்பு அல்லது பெறும் முறை.

LIM EMS : லிம் இஎம்எஸ் : லோட்டஸ் /இன்டெல்/மைக்ரோசாஃப்ட் விரிவாக்க நினைவக வரன்முறை என்று பொருள்படும்  Lotus/Intel/Microsoft Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

limit check : வரம்புச்சோதனை : ஒரு குறிப்பிட்ட எல்லை வரம்புக்குள் மதிப்பீடுகள் அமைகின்றனவா என்பதை தரவு களம் ஒன்றின் மதிப்பீட்டை சோதனை செய்யும் உள்ளிட்டுக் கட்டுப்பாட்டு உத்தி.

limiter : வரம்பி .

limiting operation : வரம்பு இயக்கம் : முறைமை ஒன்றில் மிகச் சிறிய திறன் அல்லது மிகக் குறைவான வேகம் உள்ள செயல். மாற்று வழி எதுவும் இல்லாத நிலையில் குறைவான திறன் உள்ள செயல் உள்ள நடவடிக்கை காரணமாக அந்த முறைமையின் முழுத்திறனையும் மிகக்குறைவான திறன் உடைய வரம்பு இயக்கத்தின் திறனாக வகைப்படுத்தலாம். Bottle neck என்பதற்கு ஒத்தது. Bound என்பதைப் பார்க்கவும்.

limit to list : வரம்புப்பட்டியல்.

பMs : லிம்ஸ் : லிம்ஸ் எம்ஸ் வரையறைகளுடன் கூட்டுறவில் உருவான லோட்டஸ் இன்டெல் மைக்ரோசாஃப்ட்.

Linda : லின்டா : சி, சி++ போன்ற மொழிகளுடன் சேர்க்கப்படும் இணை செயலகப் பணிகளின் தொகுதி. செயலாக்கங்களுக்கிடையே தரவுகளை உருவாக்கி, மாற்றியனுப்ப இது அனுமதிக்கிறது.

line : வரி; இணைப்பு : 1. கணினி வரைபடம் ஒன்றில் முடிவு இல்லாமல் ஜியோமிதியில் இரு திசைகளில் நீளும் புள்ளிகள் அல்லது கோடுகள். கணிதவியலில் வேறு வழியாகக் கூறப்படாதவரை இக்கோடுகள் நேர் கோடுகள் என்று கூறப்படும். 2. பெரும்பாலானநிரல்தொகுப்பு மொழிகளில் ஒரு கோடு கண்டறியக் கூடிய எண் ஒன்றில் ஒரு கோடு துவங்குகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட உரைகளைக் கொண்டதாக உள்ளது. சில நேரங்களில் ஒரு கட்டளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் தேவைப்படுகின்றன. 3. தரவு தொடர்பில் எந்த ஒரு வகையான் வழி குறிப்பாக தொலைபேசிஇணைப்புகள்.

line adapter : கம்பி ஏற்பி : தகவல் தொடர்புகளில் பயன்படும் மோடெம் போன்ற ஒரு சாதனம். தகவல் தொடர்புக் கம்பியில் அனுப்புவதற்கேற்ற வடிவில் டிஜிட்டல் சமிக்கையை மாற்றுகிறது. இணை/தொடர் மாற்று தலையும், குறிப்பேற்றம் மாடுலேஷன், குறிப்பிறக்க த்தையும் (டீ மாடுலேஷன்) மாற்ற உதவுகிறது.

line analyzer : கம்பி ஆய்வர் : ஒரு தகவல் தொடர்புக் கம்பி அனுப்புவதைக் கண்காணிக்கும் சாதனம்.

linear : நேரான;அடுத்தடுத்த : வரிசையான அல்லது ஒரு நேர்க்கோடான வரைபடத்தைக் கொண்டிருப்பது.

linear addressing architecture;தொடரியல் முகவரியிடல் கட்டுமானம் : ஒற்றை முகவரி மதிப்பைக் கொண்டு ஒரு தனிப்பட்ட நினைவக இருப்பிடம் எதையும் நுண்செயலி அணுகுவதைச் இயல்விக்கும் கட்டுமானம். இதன்படி, முகவரியிடத் தகு நினைவக எல்லை முழுமையிலும் ஒவ்வொரு நினைவக இருப்பிடங்களும் ஒரு தனித்த வரை யறுத்த முகவரியைப் பெற்றுள்ளன.

linear IC : நேர்வழி கிணைந்த சுற்று : டிஜிட்டல் ஒருங்கிணைந்த சுற்றுக்கு எதிரானது.

linear list : தொடரியல் பட்டியல் : உறுப்புகளின் வரிசைமுறைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியல். இப்பட்டியலில் முதல் உறுப்பு தவிர ஏனைய உறுப்புகள் அனைத்தும் வேறோர் உறுப் பினைத் தொடர்ந்து அடுத்ததாக இடம் பெறும். கடைசி உறுப்பு தவிர ஏனைய உறுப்புகள் அனைத்தும் வேறோர்உறுப்பின் முகவரியைப் பெற்றிருக்கும்.

Linear Programming (L. P) : நீள் நிரலாக்கத் தொகுப்பு தயாரிப்பு : ஒரு பிரச்சினைக்குத் தீர்வாகச் சிறந்த வழி இல்லாத நிலையில் மிகச் சிறந்த கலவை ஒன்றைக் கண்டுபிடிக்கும் உத்தி. இந்த உத்தி குறைந்த செலவில் சிறந்த சத்துள்ள மிக அதிகமான கலோரிகளைத் தரும் உணவுக் கலவையைத் தயாரிப்பது எப்படி என்பதற்குப் பயன்படும். மனிதர்களால் இதற்குத் தீர்வு காண் பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் இச்சமயங் களில் கணினி வழக்கமாகப் பயன்படுத்தப் படுகிறது.

linear search : நீள் தேடல் : முதல் மூலகத்தில் துவங்கும் தேடல் : பொருந்தக்கூடிய விசை ஒன்றைக் கண்டுபிடிக்கும்வரை அல்லது வரிசையின் இறுதியை அடையும்வரை ஒப்பிடல் தொடர்கிறது. linear structure : வரிசை முறை அமைப்பு : 1. தரவுத் தள நிர்வாக முறைமையில் ஒரு வகை யான கோப்பு அமைப்பு முறை. இதில் ஒவ்வொரு முதன்மை ஆவணமும் ஒரு துணை ஆவணத்தைத் தான் பெற முடியும். முதன்மை ஆவணம், நிரம்பி வழியும் பொழுது கொள்கலனாக துணை ஆவணம் செயல்படுகிறது. 2. புள்ளி விவர ஆவணங்களை நிரல்நிறையாக வரிசைப் படுத்துதல்.

linear video : வரிசைமுறை ஒளிக்காட்சி : ஒளிக்காட்சி நாடா அல்லது ஒளிக்காட்சி வட்டை தொடர்ந்து கீழிலிருந்து மேலாகச் சுற்றுவது.

line art : கோட்டு ஓவியம்.

line at a time printer : ஒரு வரி அச்சுப்பொறி  : ஒரு நேரத்தில் ஒரு வரியை அச்சிடும் அச்சுப் பொறி.

line balancing : வரி சமன் செய்தல்; தடம் சமனாக்கல் : உற்பத்திச் சூழல்களில் பணிகள் கணினி வரைபட பணி நிலையங்களுக்கு சம அளவில் ஒதுக்கி அவற்றின் திறனை உயர்த்துகிற நிர்வாக உத்தி.

line - based browser : வரி அடிப்படையிலான உலாவி : ஒரு வலை உலாவி. இதில் வரை கலைப் படங்களைக் காண இயலாது. உரைப்பகுதி களை மட்டுமே காணமுடியும். செல்வாக்குப் பெற்ற வரி அடிப்படையிலான உலாவி லின்ஸ்க் (Lynx) ஆகும்.

line cap : வரி முடி : குறிப்பாக போஸ்ட்ஸ் கிரிப்ட்டுக்கு ஒத்தியல்பான அச்சுப் பொறியில் ஒரு வரித் துண்டம் அச்சிடப்படும் போது அவ்வரித் துண்டம் முடித்து வைக்கப்படும் முறை.

line chart : கோட்டு வரைபடம் : வணிகத் தரவுகளை x, y அச்சு களிடையே ஒரு கோடாகக் காட்டுதல்.

line circuit : வரிச்சுற்று : சுற்றின் இயற்பியல் வழி தரவு தொடர்பு இணைப்பைப் போன்றது.

line concentration : இணைப்புக் குவியமாக்கம் /ஒருமுகமாக்கம் : பல்வேறு உள்ளிட்டுத் தடங் களைக் குறைந்த எண்ணிக்கையிலான வெளியீட்டுத் தடங்களில் செலுத்துவதற்கான வழி முறை.

Line counter;வரி எண்ணி : அச்சிடப்பட்ட வரிகளின் எண்ணிக்கையைக் கூட்டி பக்கம் அச்சிட வேண்டிய இடத்தை முடிவு செய்யப் பயன்படுத்தப் படும் எண் மாறிலி. line dot matrix printer : வரிப் புள்ளி அச்சுப்பொறி. டாட் மாட் ரிக்ஸ் முறையை பயன்படுத்தும் வரி அச்சுப்பொறி.

line drawing : வரைகோட்டுப் படம் : வடிவத்தின் புற விளிம்பை இடையீடற்ற கோட் டினால் குறிப்பதின் மூலம் பொருள்களை படமாக வரையும் முறை.

line driver : வரி இயக்கி : தனியார் கம்பிகள் வழியாக இணைக்கப்படும் முகப்பு களுக்கும் கணினிகளுக்கும் இடையில் உள்ள அனுப்பும் தொலைவை நீடிக்கப் பயன்படுத்தும் சாதனம். டிஜிட்டல் டிரான்ஸ்மிஷனுக்குப் பயன் படுத்தப்படுவது. கம்பியின் ஒவ்வொரு முனை யிலும் தேவைப்படுகிறது.

line editor : வரி தொகுப்பி : ஒரு நேரத்தில் ஒரு வரி செய்தியை உருவாக்கி மாற்ற அனுமதிக் கும் எளிமையான தொகுப்பு நிரலாக்கத்தொடர்.

Line Feed (LF) : வரிசை உள்ளீடு;வரியூட்டம் : ஒவ்வொரு வரியாக அச்சாளரின் தாளை முன்நோக்கித் தள்ளும் செயல்.

line filter : வரி வடிகட்டி : மின்சாரக் கம்பியில் குறுக்கிடும் மின்காந்த இடையீடுகன்ளை சரி செய்யும் கருவி.

line frequency : வரி அலைவரிசை : கம்பியின் மூலம் ஒரு நொடியில் அலை அல்லது சில சமிக்கைகளின் தொகுதி எத்தனை தடவைகள் அனுப்பப்படுகிறது என்பதைக் குறிப்பிடுவது.

line generator : வரிசை உருவாக்கி : தன்னிச்சையான ஒழுங்குமுறையில் கணினி வரைபட முறையில் வரிகளை உருவாக்கும் வன்பொருள் அல்லது மென்பொருள்.

line graph : கோட்டு வரைபடம் : ஒரு தரவு விவரத் தொகுதியின் அனைத்துத் தரவுகளையும் இணைக்கும் அல்லது இணைக்க முயலும் வரைபடம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தரவு தொகுதி ஒன்றின் போக்குகளைக் காட்ட கோட்டு வரைபடம் பயன்படுத்தப்படலாம்.

line height : வரி உயரம் : ஒரு வரிசை அச்சுக்களின் உயரம். ஒரு அங்குல உயரத்துக்கு எத்தனை வரிசைகள் என்ற அலகில் கணக்கிடப் படுகிறது.

'line hit : கம்பி பாதிப்பு : சமிக்கையில் தடை ஏற்பட்டு தகவல்தொடர்புக் கம்பியில் அனுப்பப் படும் தரவுகளில் பிழை ஏற்படுதல்.

line join : வரி இணைப்பு : குறிப்பாக ஒரு போஸ்ட் ஸ்கிரிப்ட்டுக்கு ஒத்தியல்பான அச்சுப்பொறியில் இரண்டு வரித் துண்டங்கள் அச்சிடப்படும் போது இணைக்கப்படும் முறை.

line level : கம்பி நிலை : தரவு தொடர்பு வழித்தடத்தில் சமிக்கையின் பலம். டெசிபல் அல்லது நெப்பர் முறையில் அனுப்பப்படுகிறது.

line load : இணைப்புச் சுமை : 1. தகவல் தொடர்பில், ஒரு தகவல் தொடர்புத் தடத்தின் உச்சக் கொள்திறனுக்கும் நடப்பில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு இணைப்புகளுக்கும் இடையே யான விகிதமாக அளக்கப்படுகிறது. 2. மின்னணு வியலில் ஒரு மின்னிணைப்பு சுமந்து செல்லும் மின்னோட்டத்தின் அளவு.

line noise : இணைப்பு இரைச்சல் : ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பரிமாறிக் கொள்ளப் படும் தகவலுக்கு இடையூறாகக் கலக்கும் போலிச் சமிக்கைகள். தொடர்முறை (analog) இணைப்பில் இரைச்சலானது உண்மையான கேட்பொலித் தொனி போலவடிவெடுக்கும். ஓர்இலக்க முறை (digital) இணைப்பில், இரைச்சல், தரவுவைப் பெறும் முனையிலுள்ள சாதனம் சரியான தரவுவைப் பெறுவதற்கு இடையூறாக இருக்கும்.

line number : வரிசை எண் : வரி எண் : பேசிக் போன்ற நிரல் தொகுப்பு மொழிகளில், அடை யாளம் காணலுக்காக ஆதார நிரல் தொகுப்பின் ஒரு வரியின் துவக்கமாக அமைகிற எண், எண் அடையாள வில்லை.

line of sight : பார்க்கும் கம்பி : கம்பித் தொடர்பில்லாத நுண்ணலை (Microwave) தகவல் தொடர்பில் அனுப்பும், வானலை (ஆன்டெனா) வாங்கிக்கும் பெறும் வானலை (ஆன்டெனா) வாங்கிக்கும் இடையே தடையேதும் இல்லாமல் அமைப்பது.

line of sight transmission : நேர் பார்வைச் செலுத்துகை.

line out : வெளிசெல் இணைப்பு.

line plot : வரி இடம் : தரவு புள்ளிகள் வெளிப்படும் வரைபடம் மற்றும் புள்ளிகளை இணைக்கும் கோடுகள்.

line printer : வரி அச்சடிப்பி;வரி அச்சுப்பொறி; வரிவாரி அச்சடிப்பி : ஒரே நேரத்தில் ஒரே வரியை வெளியீடாக வழங்கும் புறநிலை அச்சிடு கருவி.

line printer control : வரி அச்சக் கட்டுப்படுத்து கருவி : எழுத்து அச்சுகளை, புடைப்புகளை தானியங்கிக் கட்டுப்பாட்டை வழங்குகிற சாதனம் மற்றும் குறிப்பிட்ட அச்சுப்பொறிக்கான நேரத்தை நிர்ணயிப்பது.

line printer controller : வரி அச்சுக் கட்டுப்படுத்தி.

line printing : வரி அச்சிடல் : ஒரு வரியிலுள்ள எழுத்துகள் அனைத்தையும ஒரே அலகாக அச்சிடல்.

line segment : வரித் துணுக்கு : நீண்ட வரி ஒன்றின் பகுதி அதன் இருமுனைப் புள்ளிகளால் வரையறுக்கப்படுகிறது.

line space : வரி இடைவெளி : அச்சுக் காகிதம் நகரும்போது வரிகளுக்கிடையில் ஏற்படும் இடைவெளி. தரமானவரி இடை வெளி 1/6 அங்குலம். ஆனால், மென்பொருள் கட்டளைகளின் மூலம் இதை மாற்றலாம்.

line speed : வரி வேகம் : ஒரு குறிப்பிட்ட வழியில் சமிக்கைகளை அனுப்பக்கூடிய உயர்ந்த பட்ச வேக விகிதம் வழமையாக செய்தி வேகம் (Baud) அல்லது விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படுகிறது.

line squeeze : வரி சுருக்குதல் : அஞ்சல் சேர்த்தலில் பெயர், முக வரிகளில் வெற்று வரி வரும் போது செய்தியில் செய்யப்படும் செங்குத் தான சரிப்படுத்தல்.

linestyle : வரிக்குறியீடு;கோட்டு வகை : கணினி வரைபடத்தில் வரைபட முறைமையில் ஒரு வரியை இடைக்கோடு, தடித்த கோடு அல்லது புள்ளிகளால் குறிப்பிடும் முறை.

line surge : மின்சார வெள்ளம்; மின் தொடர் எழுச்சி : திடீரென்று உயர்ந்த வோல்ட் மின் சாரம் பாயும் நிலை. உயர் வோல்ட் மின்சாரம் திடீரென்று குறுகிய காலத்திற்குப் பாய்வதால், தவறான பதிவு, தவறான செயல்பாடு, தரவுகள் இழத்தல், சில சமயங்களில் கணினியில் மிகவும் நுண்ணிய இணைப்புகள், தரவு உள்ளிட்டு முனை யங்கள், தரவுப் பரிமாற்ற சாதனங்களின் அழிவு முதலியன ஏற்படுவதுண்டு. திடீரென்று மின்சார டிரான்ஸ்பர்மர்களை இயக்குதல் பிற துணைக் கருவிகள் இயக்குதல் மின்னல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படுவதுண்டு. உயர் வோல்ட் மின்சாரம் திடீரென்று பாய்வதைத் தடுக்கும் சாதனங்களால் கருவிகளைப் பாதுகாக்கலாம்.

line voltage : மின் இணைப்பு அழுத்தம் : மாற்று மின்சார அழுத்தம். அவற்றில் உள்ள செருகு சாதனக் கருவியிலிருந்து வருவது.

line width : கோட்டின் பருமன்;கோட்டுத் தடிப்பு : வரைபட முறைமையில் ஒரு கோட்டின் இயற்பியல் பருமன்.

line-protocol (line discipline) : வரி மரபொழுங்கு : தகவல் தொடர்பு இணைப்பின் இரண்டு முனைகளும் தங்களுக்குள் புரிந்து கொள்கிற முறையில் தரவை அனுப்புமாறு உறுதி செய்யும் துண்மி வரிசையின் தொகுதி.

lines of code : குறிமுறை வரிகள்; குறியீட்டு வரிகள் : ஒரு நிரலின் நீளத்தை அளவிடும் முறை. சூழ்நிலையைப் பொறுத்து, ஒரு குறிமுறை வரி என்பது நிரலின் ஒவ்வொரு வரியையும் குறிக்கலாம் (வெற்று வரிகள், விளக்கவுரை உட்பட). சிலவேளைகளில் கட்டளை வரிகளை மட் டும் குறிக்கும். அல்லது ஒரு கட்டளைக் கூற்றி னைக் குறிக்கலாம்.

lines per minute (pm) : நிமிடத்துக்கான வரிகள் : வரி அச்சுப்பொறி ஒன்றின் வேகத்தை நிமிடத் துக்கு இத்தனை வரிகள் என்று குறிப்பிடு வதுண்டு.

lineup icons : சின்னங்களை வரிசைப்படுத்து.

linguistic knowledge : மொழியியல் அறிவு.

linguistic theories : மொழியியல் கோட்பாடுகள்.

linguistics : மொழியியல் : மனித மொழிகளைப் பகுப்பாய்வு செய்தல். மொழியிய லுக்கும் கணினி அறிவியலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இலக்கணம், சொல் தொடர் அமைப்பு, மொழிக் கொள்கை மற்றும் இயற்கை மொழிச்செயலாக்கம்ஆகியவை இரு இயல்களுக்கும் பொது.

Link : இணைப்பு : தொடர்பு : தரவு பரிமாற் றத்தில் ஒரு இடத்திற்கும் மற்றொன்றிற்கும் இடை யிலான இயற்பியல் இணைப்பு. அதன் பணி தரவுகள் மற்றும் செயற்கைகோள் தொடர்புகளை இணைத்தல்.

link adapter : தொடுப்புத் தகவி.

linkage : இணைப்பு : இரு தனித் தனி குறியீட்டு வாலாயங்களை இணைக்கும் குறியீட்டு முறைமை. நிரல் தொகுப்பு ஒன்றுடன், அதன் பயன் பாட்டின்போது கையாளப்படும் துணை வாலாயம் ஒன்றை இணைத்தல். calling sequence என்ப தைப் பார்க்கவும்.

linkage editor : இணைப்பு தொகுப்பி : இணைப்புப் பதிப்பி : தனித்தனியாக தொகுக்கப்பட்ட நிரல் தொடர் பகுதிகள் பல வற்றை ஒன்றாக்கி ஒரு கூறை 'மாடுல்' உருவாக்கக்கூடிய நிரல் தொடர். நிரல் தொடர் மாடுல் கூறுகளிலும், துணை வாலாய (சப்ரொட்டீன்) நூலகங்களிலும் உள்ள குறிப்புகளை இது முறையாக ஒன்றுபடுத் துகிறது. இதன் வெளியீடு கணினியில் ஒட்டு வதற்குத் தயாரான ஏற்றும் கூறாகக் கிடைக்கும்.

link attribute : தொடுப்புப் பண்புக் கூறு.

link designator : தொடுப்புக்குறி கட்டி.

link edit : இணைப்புத் தொகுதி : ஒட்டு வதற்கான நிரலாக்கத் தொடரை உருவாக்க இணைக்கும் தொகுப்பியைப் பயன்படுத்துவது.

linked list : தொகுப்புப் பட்டியல்; தொகுக்கப்பட்ட பட்டியல் : தரவு மேலாண்மையில் பல வகையறாக்கள் பட்டியலிடப்பட்டு ஒவ்வொ ன்றும் அடுத்ததைக் காட்டுவதாக அமைக்கப்படும். தொடர்ந்து பரவாத சேமிப்பு இடங்களில் வரிசை முறையிலான தரவுத் தொகுதிகளை தொகுக்க இது அனுமதிக்கிறது.

Linked Talk Manager : தொடுப்புடைய அட்டவணை மேலாளர்.

linker : இணைப்பாளி : இணைப்பி; பிற நிரல் தொகுப்புகளை அல்லது நிரல் தொகுப்புகளின் பகுதிகளை இணைக்கும். நிரலாக்கத் தொகுப்பு. தனித்தனியான நிரல் தொகுப்பு கற்றைகளை ஒரு செயல்படு நிரல் தொகுப்பாக இணைக்கிறது.

linking loader : இணைப்பேற்றி : பல நிரல் தொகுப்புப் பகுதிகளை இணைக்கக்கூடிய நிர்வாக நிரல் தொகுப்பு. அதன் மூலம் அவை கணினியில் ஒரு அலகாகப் பயன்படுத்த முடியும். முக்கியப் பணிக்குத் துணைப் பணிகள் எளிதாகக் கிடைக்கக் கூடியதாக ஆக்கும் பயனுள்ள மென்பொருள் துணுக்கு.

link language : தொடர் மொழி.

link list : இணைப்புப் பட்டியல்.

link name : தொடுப்புப் பெயர்.

link register : இணைப்புப் பதிவேடு; இணைப்புப் பதிவகம் : தொகுப்பியின் நீட்சியாகச் செயல்படும் ஒரு துண்ம பதிவேடு. இது சுழற்சி அல்லது பணி நிகழ்வின்போது பயன்படுகிறது. கைப் பதிவேடு என்றும் கூறுவார்கள்.

link tables : அட்டவணைகளைத் தொடு.

link testing : இணைப்பு சோதித்தல் : ஒரு புதிய கணினிஅமைப்பு ஏற்கெனவே பயன்பட்டு வரும் ஒன்றுடன் சேருவதற்கு ஏற்றதா என்பதை ஆராயும் செயல் முறை.

link time : இணைப்பு நேரம்; தொடுப்பு நேரம் : 1. தொடுப்பு : உருவாக்கி இயக்குறு நிரலாய் மாற்றுவதற்கான நேரம். 2. தொடுப்பு உருவாக்குகின்ற நேரம்.

link time binding : தொடுப்பு நேர பிணைப்பு : மொழி மாற்றப்பட்ட பல்வேறு நிரல் கோப்புகளை ஒன்றாகத் தொடுத்து ஓர் இயக்குறு நிரலாக மாற்றும் நேரத்தில் ஓர் அடையாளங் காட்டி (identifier) க்கான மதிப்பை இருத்தும் பணியைச் செய்தல். இதுபோன்ற பணியை மூல நிரலை மொழிமாற்றம் செய்யும் போதோ, நிரலின் இயக்க நேரத்திலோ செய்ய முடியும்.

links : இணைப்புகள் : கணினி இணையம் ஒன்றில் தரவுத் தொடர்பு வழிகள்.

linotronic : லைனோடிராக் : அமெரிக்காவின் லைனோடைப் கார்ப்பரேஷன் உருவாக்கி உற்பத்தி செய்யும் அச்செழுத்துக் கருவியின் உரிமை பெற்ற தர வகை. லைனோ டிரானிக் 1200 - 2500 டிபிஐ அளவுக்கு மிக அதிக தெளிவு உள்ளது. வணிக முறையில் அச்சிடும் இடங்களில் அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது.

linpack : லின்பேக் : எண்முறை லீனியர் அல்ஜீப்ராவுக்கான ஃபோர்ட்ரான் நிரலாக்கத் தொடர்களின் தொகுப்பு. கணினியின் மிதக்கும் புள்ளி செயல்பாட்டினை சோதனை செய்யப்படும் 'பெஞ்ச் மார்க்' நிரலாக்கத் தொடர்களை உரு வாக்க இது பயன்படுத்தப்படுகிறது.

linus : லைனஸ் : லைனஸ் டோர் வால்ட்ஸ் நிறுவனம் உருவாக்கிய x86 சிப்பு தொகுதிக்கான இலவசமாகக் கிடைக்கும் யூனிக்ஸ் இயக்க அமைப்பு.

linux : லினக்ஸ் : 80386 மற்றும் மேம்பட்ட நுண்செயலிகளைக் கொண்ட பீசிக்களுக்காக உரு வாக்கப்பட்ட, யூனிக்ஸ் சிஸ்டம் IV வெளியீடு 3. 0. ஐ அடிப்படையாகக் கொண்ட முறைமைக் கருவகம் (system kerne!). ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லினஸ்டோர் வால்டு என்பவர் உருவாக்கினார். உலகிலுள்ள எண்ணற்ற ஆர்வலர்களும் லினக்ஸ் உருவாக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர். இணையம் வழியாக மூல வரைவுடன் இலவசமாக வினி யோகிக்கப்படுகிறது. இலவசம் மட்டுமின்றி மூல வரைவினைப் பெற்று எவர் வேண்டுமானா லும் மாற்றங்கள் செய்து மேம்படுத்தலாம். சில நிறுவனங்கள் பின்னுதவிக்கு மட்டும் கட்டணம் என லினக்ஸை வினியோகிக்கின்றன. கட்டறு மென்பொருள் அமைப்பு (Free Software Foundation) லினக்ஸில் செயல்படக்கூடிய ஏராளமான ஜிஎன்யூ பயன்கூறு களை உருவாக்கியுள்ளது. லினக்ஸ் கெர்னலை வெளியிட்டுள்ளது.

Lips : லிப்ஸ் : Logical inferences per second என்பதன் குறும்பெயர். 5வது தலைமுறை கணினியின் வேகத்தை அளப்பதற்கான அலகு.

Liquid Crystal Display (LCD) : நீர்மப் படிகக் காட்சி : திரவப் படிகக்காட்சி : இரண்டு தாள் துருவமாக்கு பொருளை திரவப் படிகக் கரைசலின் மூலம் இணைத்துக் காட்டும் காட்சி வெளியீடு. மின்னோட்டம் காரணமாக திரவப்படிகள் இணை கின்றன. அதனால் அவற்றின் வழி ஒளி ஊடுருவு வதில்லை; படிமங்கள் தோற்றுவிக்கப் படுகின்றன.

liquid crystal display panel : நீர்ம படிகக் காட்சிப் பாளம்.

Liquid Crystal Shutters : நீர்ம படிக மூடிகள் : மின் ஒளிப்பட வரைபட அச்சுப் பொறியில் உருளைக்கு ஒளியை அனுப்பும் முறை. திரவ படிகப் புள்ளிகள் மூடிகளாகச் செயலிட்டு திறந்து மூடுகின்றன.

liquid plastics : நீர்மக் குழைமம்.

Lisa : லிசா : ஆப்பிள் கணினி நிறுவனத் தினால் உருவாக்கப்பட்ட வணிகத்துக்கான குறுங்கணினி.

Lisp : லிஸ்ப் : List processing என்பதன் குறும்பெயர். மொழியியல் அலசல் பட்டியல்களைக் கொண்ட தரவுகளை வகை செய்வதை முதல் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உயர் நிலை நிரல் தொகுப்பு முறைமை. இது உரையைக் கையாளுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் சிறப்பாக அமெரிக்காவில் செயற்கைப் பகுத்தறிவுக்கான தேர்வு செய்யப்படும் நிரல் தொகுப்பு மொழி.

Lisp machine : லிஸ்ப் கணினி : செயற்கை யான பகுத்தறிவுப் பயன்பாடுகளுக்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட கணினி. அதுவும் Lisp மென் பொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக் கப்பட்டது.

list : பட்டி : 1. வரிசை முறைமையற்ற வழியில் தரவுகளைப் பெறுவதற்காக உள்ளடக்க பட்டியல், குறிப்பிட்டுக் காட்டிகளைப் பயன்படுத்தி தரவு களைச் சேர்த்தல் . 2. வரிசைப் படுத்தப்பட்ட குழு பொருள் கள். 3. உள்ளிட்டுத் தரவுவின் ஒவ்வொரு தொடர்புட்ைடிய பொருளையும் 4. நிரல் தொகுப்பு அறிவிக்கை களை அச்சிடுவதற்கான கட் டளை. எடுத்துக்காட்டாக அடிப் படை மொழியில் உள்ள வரிசைக் கட்டளை நிரல் தொகுப்பை அச் சிடச் செய்யும். 5. வரிசைப் படுத்தப்பட்ட தொகுப்புப் பொருள்கள்.

list box : பட்டியல் பெட்டி : விண்டோஸ் போன்ற வரை கலை பணிச் சூழலில் பயன் படும் ஒர் இயக்குவிசை. விருப்பத் தேர்வுகளின் பட்டி யலிலிருந்து பயனாளர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப் பளிக்கும். பட்டியல் பெட்டி இருவகையாகத் தோற்றமளிக் கும். முதல் வகை : தரவுவை உள்ளீடு செய்வதற்குரிய உரைப் பெட்டி (Text Box) ஒன்று இருக் கும். அதனை ஒட்டிக் கீழே ஒரு பட்டியல் தோற்றமளிக்கும். பட்டியலிலிருந்து தேர்வு செய் யும் உறுப்பு உரைப்பெட்டியில் வந்து அமர்ந்து கொள்ளும். இரண்டாவது வகை : உரைப் பெட்டி மட்டுமே இருக்கும். வலது ஒரத்தில் சிறிய தலைகீழ் முக்கோணப் புள்ளி இருக்கும். அதைச் சொடுக்கினால், பட்டியல் விரியும். பட்டியலிலுள்ள ஒர் உறுப்பை தேர்வு செய்து கொள்ளலாம். இரண்டுவகை பட்டியல் பெட்டிகளிலும், பயனாளர் தாமாக எதையும் உள்ளீடு செய்ய முடியாது.

list error : பட்டியல் தவறு

listing : வரிசையிடு; பட்டியலிடல் : அச்சிடு கருவியில் உரு வாக்கப்பட்ட பொதுவான ஏதாவதொரு அச்சிடப்பட்ட பொருள். ஆதார வரிசை என்பது தொகுப்பானால் வகைப் படுத்தப்பட்ட ஆதார நிரல் தொகுப்பு. ஒரு தவறான வரிசையிடல் என்பது எல்லா உள்ளிட்டுத் தரவுகளும் வகைப் படுத்தும் நிரலாக்கத் தொகுப் பினால் பயனற்றவை என அறியும் நிலை.

list organization : பட்டியல்வனம் : பட்டியல்கள் வடிவில் தரவுகளைச் செயலாக்கும் முறை. list processing : பட்டியல் வகைப்படுத்தல் : தரவுகளை பட்டியலாக வகைப்படுத்தும் முறை.

list processing language : பட்டியல் அஞ்சல் மொழி : பட்டியல் வகைப்படுத்தும் மொழிகள் : தரவுகளை lpl, lisp, POP-2, மற்றும் sail போன்ற வடிவங் களுக்கு மாற்றுவதற்கு வகை செய்யும் விதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மொழிகள்.

list rows : பட்டியல்கிடைக்கைகள்.

LISTSERV : லிஸ்ட்செர்வ் : வணிக முறையிலமைந்த மிகவும் செல் வாக்குப் பெற்ற அஞ்சல் பட்டி யல். எல்-சாஃப்ட் பன்னாட்டு நிறுவனம் பிட்நெட், யூனிக்ஸ் மற்றும் விண்டோஸில் செயல் படும் பதிப்புகளை வெளி யிட்டுள்ளது.

list structure : வமைப்புகள் : டி. பி. எம். எஸ் அமைப்பில் தரவுவைச் சேமிக்கும்முறை. இதில் காட்டிகள் மூலம் பதிவேடுகள் இணைக்கப்படுகின்றன.

literal : நிலையுரு : மாற்றமிலி என்பதற்கு மாற்றுப்பெயர். இக்குறியீடு தன் விளக்கம் உடையது.

lithium ion battery : லித்தியம் அயனி மின்கலம் : உலர் வேதியல் கலன்களில் ஒரு மின்சக்தி சேமிப்புச் சாதனம். வேதியல் ஆற்றலை மின்னாற்றலாய் மாற்றும் நுட்பத்தை அடிப் படையாகக் கொண்டது. விலை அதிகமானபோதும் மடிக் கணினிகளுக்கு லித்தியம் அயனி மின்கலன் மிகவும் உகந்த தாய்க் கருதப்படுகிறது. ஏனெனில், மடிக்கணினிகளில் அதிவேக செயலிகள், சிடி ரோம் இயக்ககம் போன்ற சாதனங்கள் எடுத்துக்கொள்ளும் அதிகமான மின்சாரத்துக்கு ஈடுகொடுப்ப திலும், உயர் சேமிப்புக் கொள் திறனிலும் இது, நிக்கல் கேட் மியம் மற்றும் நிக்கல் உலோக ஹைடிராக்ஸைடு மின்கலன் களைக் காட்டிலும் சிறந்ததாக உள்ளது.

litrary function : நூலகச்செயல் கூறுகள் : நூலகச் சார்பு மொழியகச் சார்பலன்

little endian : சிறு முடிவன் : எண்களை இரும முறையில் இருத்தி வைப்பதில் ஒருமுறை. குறை மதிப்புள்ள பைட் முதலில் இடம்பெறும். (எ-டு) A02B என்னும் பதினறும எண்ணை எடுத்துக் கொண்டால் சிறு முடிவன் முறையில் 2BA0 என்று பதிந்து வைக்கப்படும். இன் டெல் நுண்செயலிகளில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. இம்முறை பின்னோக்கு பைட் வரிசைஎன்றும் அழைக்கப்படும்.

live : நேரடி நிகழ்நேர : 1. ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது. : 2. ஒர் இணைய தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுவை இணைய இணைப்பின் மூலம் பெறமுடியும். அவ்வாறில் லாமல் அவை உருவாக்கப்படும் போதே அலைபரப்பச் செய்வது. 3. ஒர் ஆவணத்தை அல்லது ஆவணத்தின் ஒரு பகுதியை பயனாளர் இணையம் வழி பார்வையிடும்போதே மாற்றி யமைக்க வாய்ப்பளிப்பது.

Live 3D : லைவ் 3டி (நிகழ் நேர 3டி) : நெட்ஸ்கேப் நிறுவனத் தின் மென்பொருள். வலை உலாவியுடன் இணைக்கப்பட்ட மெய்நிகர் நடப்பு, உருவார மொழி (Virtual Reality Modelling Language) ஆகும் இணையப் பயனாளர்கள் மெய்நிகர் நடப்பு உலகைப் பார்வையிடவும் ஊடாடவும் அனுமதிக்கும் மென்பொருள்.

live data : நடப்புத் தரவு : நிரல் தொகுப்பு ஒன்றினால் வகைப்படுத்தப்பட வேண்டிய தரவுகள்.

live project : நடப்புத் திட்டம் : நேரடி செய்முறைப் பயிற்சி ; நிகழ்நேரத் திட்டம்.

liveware : உயிர்ப்பொருள் : கணினி மையம் ஒன்றில் உள்ளோர் அல்லது வன்பொருள் மற்றும் மென்பொருள்களைப் பயன்படுத்துவோர்.

. lk : எல்கே : ஒர் இணைய தளமுகவரி, இலங்கை நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

load : ஏற்றி : 1. கணினி ஒன்றின் சேமிப்பிலிருந்து தரவுகளைப் படித்தல். : 2. அட்டை வாசிப் பியில் அட்டைகளை இடல். காகித நாடா வாசிப்பானில் காகித நாடா ஒன்றை இடல் அல்லது வட்டத் தகடு இயக்கும் பிரிவில் வட்டத் தகட்டுத் தொகுப்பை இடல்.

load and go : ஏற்றி இயங்கு : நிரல் தொகுப்பு ஒன்றின் ஏற்றுதல் மற்றும் இயக்கப் பகுதிகளை ஒரே தொடர்ச்சியாக நிகழ்த்தும் இயக்க உத்தி.

loaded line : சுமையேற்று தடம் / இணைப்பு : தகவல் தொடர்புக்கான கம்பித் தடத்தில் மின்னோட்டத்துக்கு ஏற்ப மாறும் மின்தடையைச் சேர்த்து வீச்சுச்சிதைவினை (Amplitude distortion) குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை. அலை பரப்பு ஊடக மான கம்பி வடத்தில் சுமைச்கருணைகளை (loading coils) இணைப்பது. பெரும்பாலும் ஒரு மைல் தொலைவு இடை வெளிகளில் இவை இணைக்கப்படும். loader : ஏற்றுவி : உள் சேமிப்பில் உள்ள நிரல் தொகுப்புகளை அவற்றை நிறைவேற்ற வகை செய்யும் தயாரிப்பாக படிக்க வகை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட பணி நிரல்.

loader routine : ஏற்று நிரல் கூறு : இயக்குறு குறிமுறைக் கோப்புகளை நினைவகத்தில் ஏற்றி, இயக்கும் ஒரு நிரல்கூறு. ஓர் ஏற்று நிரல்கூறு இயக்க முறைமையின் ஓர் அங்கமாக இருக்கலாம் அல்லது இயங்கும் நிரலின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.

loader, card : அட்டை ஏற்றி.

load high : மேலே ஏற்று : உயர் நினை வகத்தில் நிரலாக்கத் தொடர்களை ஏற்றுதல்.

loading : பளுவேற்றம்;ஏற்றம் : நிரலேற்றம்.

Load Module : ஏற்றம் கூறு : கணினி இணைப்பினால் உடனடியாக செயல்படுத்தப் பொருத்தமான வடிவில் உள்ள கணினி நிரல் தொகுப்பு.

load point : ஏற்றுப்புள்ளி : மின்காந்த நாடா ஒன்றில் பதிவு துவங்கும் புள்ளி.

load sharing : சுமைப் பகிர்வு : உயர் சுமை நேரங்களில் கூடுதல் வேலையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளைப் பயன்படுத்தும் உத்தி. உயர் சுமைக்கும் குறைவான பளு உள்ள நேரங்களில் ஒரு கணினியை மட்டுமே பயன் படுத்துதல் விரும்பத்தக்கது. பிறவற்றை நெருக்கடி நிலைக்கு உதவு கருவியாகப் பயன்படுத்தலாம்.

local : உள்ளமை : 1. அதற்குரிய இடத்தில் உள்ள கணினி ஒன்றின் கருவி தொடர்பானது. 2. நிரலாக்கத் தொகுப்பு ஒன்றின் வரையறுக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தப்படும் பொருள்கள் தொடர்பானது.

Local Area Network : LAN : குறும் பரப்பு பிணையம்;சிறு பரப்பு பிணையம்;பகுதி வலைப் பின்னல்;வளாகப் பிணையம் : கட்டடம் ஒன்றில் உள்ள பல்வேறு வன்பொருள் சாதனக் கருவிகளை இணைக்கும் தகவல் தொடர்பு பிணையம். தொடர்ச்சியான கம்பியினால் பிணைக்கப் பட்டிருத்தல் அல்லது கட்டடத்தின் உள்பகுதிக்கான குரல் தரவு தொலைபேசி முறைமையினால் பிணைக்கப்பட்டிருத்தல்.

local bus : உள்ளமைவழித்தடம் : செயலகத் திற்கும் முதன்மை நினைவகத்திற்கும் இடையே வேகமாகவும் அகலமாகவும், இணைப்பை ஏற்படுத் துவது அல்லது வீடியோ ஏற்பி. local bypass : உள்ளமை துணை வழி : உள்ளூர் தொலைபேசி நிறுவனத்தைப் பயன்படுத் தாமல் இரண்டு வசதிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது.

local group : உள்ளமை குழு;வட்டாரக் குழு : 1. விண்டோஸ் என்டியிலுள்ள பயனாளர் குழு. குழு உருவாக்கப்பட்டுள்ள பணிநிலையக் கன்னினியின் வளங்களை மட்டும் கையாளும் உரிமையும் சலுகை யும் பெற்ற ஒரு பயனாளர் குழு. பணி நிலையத் தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பயனாளர்கள் பணி நிலைய வளங்களை அணுக வசதியான ஒரு வழிமுறையை வட்டாரக் குழுக்கள் வழங்குகின்றன. 2. விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர் இயக்க முறைமையில் வட்டாரக் குழு என்பது அதன் சொந்த களம் (own domain) அமைந்துள்ள வழங்கன் (server) கணினிகளின் வளங்களை மட்டும் அணுக உரிமையும் சலுகையும் பெற்ற பயனாளர்களின் குழு. களத்தின் வெளியேயும் உள்ளேயும் உள்ள பயனாளர்கள், அவர்கள் சார்ந்த களத்தின் வழங்கன்களிலுள்ள வளங்களை மட்டும் அணுக வட்டாரக் குழுக்கள் வாய்ப்பாக உள்ளன.

localhost : உள்ளமை புரவன் : ஒரு டீசிபி/ஐபி செய்தி அனுப்பப்படும் அதே கணினியை புரவனாக உருவகிக்கும் பெயர். உள்ளமை புரவனுக்கு அனுப்பப்படும் தரவு பொட்டலம் 127. 0. 0. 1 என்ற ஐபீமுகவரியைக் கொண்டிருக் கும். ஒரே கணினி கிளையனாகவும் புரவனாகவும் செயல்படும். உண்மையில் அச்செய்தி இணையத் திற்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாது.

local intelligence : உள்ளமை நுண்ணறிவு; பகுதிப்பகுப் பாய்வு : முனையம் ஒன்றிலேயே அமைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தும் திறன் மற்றும் சேமிப்புத்திறன். அதனால் சில பணிகளைச் செய்ய கணினி ஒன்றுடன் இணைக்கத் தேவையில்லை.

localization : வட்டார மயமாக்கால் : ஒரு நிரலை அந்நிரல் பயன்படுத்தப்படும் நாடு/ஊர்/ மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் செயல்முறை. (எ-டு). சொல்செயலி மென்பொருளை வெவ்வேறு மொழிகளில் உருவாக்கும் நிரலர்கள் அட்டவணை களை/பட்டியல்களை வரிசை முறைப்படுத்தும் நிரலை அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப அமைக்க வேண்டும். ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமையும் எழுத்துக் குறிமுறை பிறமொழியில் வேறு வரிசையில் அமையலாம்.

local loop : உள்ளமைதனிச்சுற்று வழி : வாடிக்கையாளருக்கும் தொலைபேசி நிறுவனத்தின் மைய அலுவலகத்திற்கும் இடையேயான தகவல் தொடர்புப் பாதை.

local memory : உள்ளார்ந்த நினைவகம் : தனி மையச் செயலகத்தில் பயன்படுத்தப்படும் நினை வகம் அல்லது தனிநிரல் தொடருக்கோ அல்லது பணிக்கோ ஒதுக்கப்படுவது.

local network : வட்டாரப் பிணையம்.

Local newsgroups : வட்டாரச் செய்திக் குழுக்கள் : ஒரு நகரம், ஒரு பல்கலைக்கழகம் என வரம்புக்குட்பட்ட நிலப்பரப்பில் இயங்கும் செய்திக் குழுக்கள். இச்செய்திக் குழுவில் அஞ்சல் செய்யப் படும் கட்டுரைகள் அந்த வட்டாரம் குறித்த தகவலையேக் கொண்டிருக்கும்.

local reboot : உள்ளமை மீட்டியக்கம் : ஒரு பிணையத்தில் இணைக்கப்பட்ட ஒரு கணினியை அதனுள்ளேயே மீட்டியக்குவது. (தொலைப் புரவ னிலிருந்தும் மீட்டியக்க முடியும்

local store ) : பகுதிச் சேமிப்பகம்; உள்ளமைத்தேக்ககம் : உயர்வேக சேமிப்புத் திறனுள்ள குறைந்த எண்ணிக்கையிலான பொருள் கள். நேரடியாக கட்டளைகளை அவைகளுக்கு அனுப்ப இயலும்.

local talk : உள்ளமைப் பேச்சு : ஆப்பிள் நிறுவனத்தின் லேன் அணுகுமுறை. இது முறுக்கப் பட்ட இணைக்கம்பிகளைப் பயன்படுத்தி ஒரு நொடிக்கு 2, 30, 400 துண்மிகளை அனுப்புகிறது. Apple Talk இன் கீழ் இயங்கி டெய்சி சங்கிலி இடத்திய டோப்பாலஜியைப் பயன்படுத்துகிறது. 1, 000 அடி தொலைவுவரை உள்ள 32 சாதனங் களை இது இணைக்கும். மூன்றாவது நபர் பொருள் களுடன் வழித்தடம், அமைதி யான நட்சத்திரம் மற்றும் இயங்கும் நட்சத்திர இடத்தியல்களில் இயங்கும். ஆப்பிள் டாக் கட் டமைப்பிலும் இயங்க முடியும்.

local terminal : உள்ளார்ந்த முனையம் : மையச் செயலகத்திற்கு அருகே உள்ள முகப்பு. ஆகவே, அதனை நேரடியாக இணைக்க முடியும்.

local usenet hierarchy : உள்ளமை யூஸ்நெட் படிநிலை.

local variable : வரம்புறு மாறிலி : உள்ள மாறிலி : துணை வாலாயம் (சப்ரொட் டீன்) போன்ற ஒரு நிரல் தொடர் கூறு மாடுல் மூலம் கட்டுப்படுத் தக்கூடிய மதிப்பினைக் கொண்ட மாறிலி. முதன்மை நினைவகம் அல்லது பிற கூறுகளால் அணுகக் கூடியதாகவோ அல்லாத தாகவோ இது இருக்கலாம்.

location:இருப்பிடம்;அமைவிடம்:கணினி ஒன்றின் நினைவகத்தில் தகவல்களைச் சேமிப் பதற்கான பகுதி.

location, bit:துண்மி அமைவிடம்;பிட் இருப்பிடம்.

lock:பூட்டு:1.கணினி ஆதாரத்தை ஒருவர் மட்டும் பயன்படுத்த உதவுதல்.2.மாற்றப்படுதல் அழித்தலிலிருந்து வட்டினை அல்லது நாடாக் கோப்பைப் பாதுகாத்தல்.

lock code:பூட்டுக் குறியீடு:பயன்படுத்து வோரின் நிரல் தொகுப்பை அங்கீகாரமற்ற வகையில் காலப்பகிர்வு முறையில் பயன்படுத்தும் பிறரால் சிதைக்கப்படாமல் காக்க வழங்கப்படும் வரிசைப்படியான எழுத்துகள் மற்றும் எண்கள். பயனாளர் சரியான பூட்டுக் குறியீட்டைப் பயன் படுத்தாவிட்டால் பயனாளர் நிரல் தொகுப்பில் மாற்றங்களைச் செய்ய கணினி மறுக்கும்.

locked file:பூட்டிய கோப்பு:1.கையாள முடியாமல் பூட்டி வைக்கப்படும் ஒரு கோப்பு. குறிப்பாக,தரவுவை மாற்றியமைத்தல்,புதிய தரவுவைச் சேர்த்தல்,இருக்கும் தரவுவை நீக்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு இடம் கொடாமல் பூட்டி வைக்கப்படும் கோப்பு.2.அழிக்க முடியாத,வேறிடத் துக்கு மாற்ற முடியாத அல்லது பெயர் மாற்ற முடியாத ஒரு கோப்பு.

locked up keyboard:பூட்டப்பட்ட விசைப்பலகை :விசைகளின் இயக்கத்துக்கு கணினி இயங்க மறுக்கும் நிலைமை.

locked volume:பூட்டிய தொகுதி:ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் சேமிப்பகங்களில் எழுத முடியாமல் தடுக்கப்படும் தொகுதி.ஒரு வன்பொருள் கருவி மூலமோ அல்லது ஒரு மென்பொருள் மூலமோ இவ்வாறு பூட்டிவைக்க முடியும்.

'locking a disk:வட்டைப்பூட்டல்::வட்டு ஒன்றின் உரிமை பாதுகாக்கப்பட்டதாக இருந்தால் அந்த வட்டு பூட்டப்பட்டதாகும்.கணினியின் பிற தரவு களினால் வட்டின் உள்ளடக்கங்கள் திருத்தப் படாமல் பாதுகாப்பதை இந்நடவடிக்கை உறுதி செய்கிறது. lockout : வெளித்தாழ் அடைப்பு : 1. இடை யீட்டை ஒடுக்குதல். 2. பல்முனை வகைப்படுத்து சூழலில் முக்கிய தரவுகளை ஒரே நேரத்தில் வகைப்படுத்தும் அலகுகள் பெற வகை செய்யும் நிரல் தொகுப்பு உத்தி.

lockup : பூட்டப்பட்ட முடக்கம் : மேலும் எந்தச் செயலும் நடைபெற முடியாத சூழ்நிலை.

log : பதிவு : பதிவு செய்தல் : ஒவ்வொரு வேலை அல்லது ஓட்டம், அதற்குத் தேவைப்படும் நேரம், இயக்குபவர் செயல்கள் மற்றும் தொடர்பான தரவுகளைப் பட்டியலிடும் தரவு செயலாக்கக் கருவியின் இயக்கங்களின் பதிவேடு.

logarithm : லாகரிதம்;மடக்கை : ஒரு குறிப்பிட்ட எண்ணை உருவாக்க ஒரு நிலை யெண்ணை எத்தனை மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதைத் குறிப்பிடுவர். அது பொது வாக 10 அல்லது 0 ஆக இருக்கும். சான்றாக 2இன் 3 மடங்கு 8-க்குச் சமம் என்றால் 2இன் ஆதார எண்ணாகக் கொண்டு 8-ஐக் கொண்டுவர3 லாகரிதம் ஆகும். இதன் பொருள் 2-ஐ அதன் மூன்றாதாவது மதிப்புக்கு உயர்த்தினால் 8 வரும் என்பதாம்.

logarithm tables : மடக்கை அட்டவணை.

log book : பதிவுப் புத்தகம் : கணினி தொழிலுக்குக் கடன் வாங்கப்பட்ட கடல்துறை குழூஉக் குறி. வேலையில் இருக்கும் கணினி பணியாளர்களைப் பற்றியும் அவர்கள் செய்து முடித்த பணிகளைப் பற்றியும் பதிவேடு வைத்துக் கொள்ள இது உதவுகிறது. வன்பொருள் பராமரிப்பு நேர ஒதுக்கீடுகள் மற்றும் பழுதானவைகளைப் பற்றிய பதிவேடு வைத்திருக்கவும் இது உதவு கிறது.

logging off : முடித்தல்;வெளிவருதல் : கணி னிக்கும் அதைப் பயன்படுத்துபவருக்கும் இடையே யுள்ள தகவல் தொடர்பை முடித்து வைக்கும் செயல்முறை.

logging-in : உள் நுழைத்தல்;தொடங்கல்; கணிப்பொறியினுட் புகும் செயற்பாடு : உரையாடல் முறையில் ஒப்பமிட்டு கணினியைப் பயன்படுத்தும் உரிமை பெற்றவரைச் சோதித்துக் கணினியுடன் தகவல்தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் செயல் முறை.

logic : தருக்கம்;அளவை : தருக்கப் பொருத்தம் : அளவைப் பொருத்தம் : 1. காரண மறிதல், கருத்து ஆகிய முறையான கொள்கை களை ஆராயும் அறிவியல். 2. தானியங்கி தரவு செயலாக்க அமைப்பில் எண் முறைக் கணிப்புகள் செய்யும் அளவைப் பொருள்களுக்கிடையிலான இணைப்பு மற்றும் உண்மைப் பட்டியல்களைப் பயன்படுத்துவது பற்றிய அடிப்படைக் கொள்கை கள்.

logical : தருக்கமுறை : 1. எண் வகை மதிப்புகளைக் கொண்டு கணக்கீடு செய்வதுபோல் அல்லாமல் சரி/தவறு என்று இரண்டிலொரு முடிவை எடுக்கும் முறை. (எ-டு). ஒரு தருக்கத் தொடர் (logical expression) என்பது, அதன் இறுதி விடை சரி அல்லது தவறு என்கிற ஒற்றை விடையாக இருக்கும். 2. கருத்துருவாக நிலவும் ஒரு கொள்கை அல்லது கோட்பாடு. அதை உண்மையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது முக்கிய மில்லை.

logical add : தருக்கக் கூட்டல் : கணினி தருக்க இயக்கத்தில் ஒரு அளவை கூட்டல்.

logical comparison : தருக்கமுறை ஒப்பீடு : தரவு அல்லது விளக்கங்கள் போன்ற இரண்டு வகையான தரவுகளை ஒப்பிட்டு அவை ஒரே மதிப்புகளைக் கொண்டவையா என்பதை முடிவு செய்யும் தருக்கம்.

logical data : தருக்கமுறை தரவு : உண்மை அல்லது பொய் என்று பட்டம் தரப்பட்ட இரண்டு மதிப்புகளில் ஒன்று.

logical data design : தருக்கமுறை தரவு வடிவமைப்பு.

logical data elements : தருக்கமுறை தரவுப் பொருள்கள் : எந்த பருப்பொருள் ஊடகத்தின் மீது பதியப்படுகிறது என்பதற்குத் தொடர்பில்லாத சுயேச்சையான தரவுப் பொருள்கள்.

logical data group : தருக்கமுறை தரவுக்குழு : பல மூலாதாரங்களில் இருந்து எடுக்கப்படும் விவரம்.

logical data system Design : தருக்க முறை தரவு அமைப்பின் வடிவமைப்பு : தரவுகளுக் கிடையிலான உறவைக் காட்டும் வடிவமைப்பு. பயன்பாட்டு நிரல் தொடர்கள் அல்லது தனிப்பட்ட பயன்படுத்துபவர்கள் தரவுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது.

logical decision : தருக்கமுறை முடிவு : இரண்டு வகையான செயல்முறைகளில் எதைக் கடைப்பிடிக்கலாம் என்பது. மதிப்புகளை ஒருவாறு ஒப்பிடுதலை அடிப்படையாகக் கொண்டது.

logical design : தருக்கமுறை வடிவமைப்பு : குறியீட்டுத் தருக்க முறையில் ஒரு கணினி அமைப்புப் பகுதிகளுக்குள் செயல் உறவு எப்படி இருக்கும் என்பதைக் குறிப்பது.வன்பொருள் இயக்கத்தின் தொடர் பின்றி அமைவது.

logical device:தருக்க சாதனம்:ஒரு கணினி அமைப்பில் ஒரு சாதனத்தின் பருவுரு வகையிலான உறவுமுறை எப்படி இருப்பினும் மென்பொருள் முறைமையின் தருக்க அடிப்படை யில் பெயர் குறிக்கப்பட்ட ஒரு சாதனம்.(எ-டு) எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் ஒற்றை நெகிழ்வட்டு இயக்ககம் 'ஏ' என்றழைக்கப்படும். அதனையே பி என்றும் பெயரிடலாம்.கணினியில் இரு நெகிழ் வட்டகம் இல்லாத போதும் DISKCOPY A. B:என்று கட்டளை அமைக்கலாம்.இதில் B என்பது தருக்க சாதனமாகச் செயல்படுகிறது.

logical drive:தருக்கமுறை இயக்கி:தனி அலகாக நிர்வகிக்கப்பட்டு பெயரிடப்படும் பருப் பொருள் இயக்கியில் ஒதுக்கப்பட்ட பகுதி.

logical error:தருக்கமுறைப் பிழை:நிரல் தொடர் மொழி இலக்கணப்படி சரி என்றாலும் தவறான செயல்முறை ஏற்படக் காரணமான நிரல் தொடர் அமைப்புப் பிழை.

logical expression:தருக்க வெளிப்பாடு: உண்மை அல்லது பொய் என்பதை வெளிப்படுத் தும் வெளிப்பாடு.

logical field:தருக்கப் புலம்: ஆம்/இல்லை,உண்மை/பொய் ஆகியவைகளைக் கொண்டுள்ள நிரல் புலம்.

logical file:தருக்கமுறைக் கோப்பு: ஒன்று அல்லது மேற்பட்ட தருக்க முறைப்பதிவேடு களின் தொகுப்பு.

logical inference:தருக்க முடிவுகள்.

logical instruction:அளவை முறை ஆணை :'குறியீட்டு தருக்கமுறையில் வரையறுக்கப் பட்ட இயக்கத்தை கணினியைச் செய்ய வைக்கும் ஆணை.

logical lock:தருக்கமுறைப் பூட்டு: தரவு களைப் பயன்படுத்துவதிலிருந்து பயன்படுத்து பவரைத் தடுப்பது.மென்பொருள் பயன்படுத்து வதன் மூலம் கோப்பு அல்லது பதிவேட்டில் அடையாளமிட்டு இதைச் செய்யப்படுகிறது.

logical multiply:தருக்கமுறொப் பெருக்கல்:

logical operations:தருக்கமுறை இயக்கங்கள் : தருக்க முறை அடிப்படையில் அமைந்த கணினி இயக்கங்கள் தருக்க முறை முடிவுகள் போன்றது. முடிவு எடுக்கத் தேவையில்லாத தரவு மாற்றல் இயக்கம் மற்றும் கணக்கீட்டு இயக்கம் ஆகிய வைகளுக்கு மாறானது.

logical operator : தருக்க இயக்கி : AND, OR, NOT ஆகிய கூட்டு நிலைகளை உருவாக்க தொடர்புடைய இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று.

logical product : தருக்கமுறைப் பொருள் : பல சொற்களின் AND பணிகள். அனைத்து சொற் களும் 1 ஆக இருக்கும்போது பொருள் 1 ஆக இருக்கும். அப்படி இல்லை யென்றால் ‘0’ ஆகி விடும்.

logical product : தருக்கமுறைப் பெருக்கற் பலன்.

logical reasoning : தருக்கமுறை விளக்கச் செய்முறைகள்.

logical record : தருக்கப் பதிவேடு : அதன் பருப்பொருள் இருப்பிடத்திற்குத் தொடர்பில்லாமல் ஒரு தகவல் பதிவேட்டைக் குறிப்பிடுதல். இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களிலும் இதை சேமிக்க முடியும்.

logical representation : தருக்கமுறைக் குறிப்பீடு : 'தருக்கமுறை வாய்பாடுகளின் தொகுதியைக் கொண்ட அறிவுக் குறிப்பீடு.

logical rules : தருக்கமுறைச் சட்டங்கள்.

Logical sector number : தருக்கமுறைப் பிரிவு எண் : தட்டு பிரிவுகளை பக்கம் எக்ஸ், வழித் தடம் எக்ஸ், பிரிவு எக்ஸ் என்று பிரிப்பதற்குப் பதிலாக, தருக்க முறை பிரிவு எண்கள் தட்டின் வெளிப்புற விளிம்பிலிருந்து தொடங்கி எல்லா பிரிவுகளையும் எண்ணி ஒரு பிரிவின் இடத்தைக் குறிப்பிடுகிறது.

logical sum : தருக்கமுறைக் கூட்டுத் தொடர் : தருக்க முறைக் கூட்டல் : பல சொற்களின் உள் வாங்கும் or செயல். ஒன்று அல்லது எல்லா சொற் களும் 1 ஆக இருந்தால் தொகையும் 1 ஆக இருக்கும். எல்லாம் 0 ஆனால் அதுவும் 0 ஆகும்.

logical symbol : தருக்கமுறைக் குறியீடு.

logical system design : தருக்க அமைப்பு வடிவமைப்பு : அடிப்படை தரவு அமைப்பு பயன் படுத்துபவரின் தேவையை எந்த அளவு சமாளிக் கிறது என்பதற்கான பொதுவான தருக்க முறை களை உருவாக்குதல்.

logical type field : தருக் வகைப் புலம். logical unitnumber : தருக்கமுறை அலகு எண் : ஒரு பருப்பொருளாக உள்ள வெளிப்புற சாத னத்துக்குக் கொடுக்கப்படும் எண்.

logical value : தருக்கமுறை மதிப்பு : ஒரு குறிப்பிட்ட தருக்க முறை முடிவின் விளைவாக உண்மை அல்லது பொய்யாக மாறும் மதிப்பு.

logic analyser : தருக்க ஆய்வர் : இலக்க முறை அமைப்புகளின் தருக்க நிலைகளைக் கண் காணித்து பின்னர் காட்டுவதற்காக முடிவுகளை சேமிக்கும் ஒரு மின்னணு கருவி.

logic array : தருக்க வரிசை : மின்னணு வாயில்களின் வரிசை. கணினியின் பல்வேறு பணிகளை வாடிக்கையாளரின் சிறப்புத் தேவைக் கேற்ப செய்வதற்காக வரிசைப்படுத்தப்பட்டு அமைக்கப்படும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள்.

logic board : தருக்கப் பகை.

logic bomb : தருக்க குண்டு : தரவுகளை அழிக்கும் நிரல் தொடர். அது வன்தட்டை மறுவடி வமைத்து அல்லது தரவு கோப்புகளில் தற்செயல் துண்மிகளை அமைத்து நாசம் செய்யலாம். பாழ்பட்ட வெளியில் கிடைக்கும் நிரல் தொடர்களை வாங்கி ஏற்று வதன் மூலம் இது பீ. சி. யில் கொண்டு வரப்படலாம். ஒரு முறை இயக்கப் பட்டால் நேரடியாக இது பாழாக்குவதில்லை. ஆனால், நச்சு நிரல் (வைரஸ்) அழித்துக் கொண்டே இருக்கும்.

logic card : தருக்கமுறை அட்டை : ஒன்று அல்லது மேற்பட்ட தருக்கப் பணிகள் அல்லது இயக்கங்களைச் செய்யக்கூடிய உறுப்புகள் அல்லது கம்பி யிணைப்புகளைக் கொண்ட மின்சுற்று அட்டை.

logic chip : தருக்க சிப்பு : செயலக அல்லது கட்டுப்பாட்டுச் சிப்பு.

logic circuits : தருக்க மின் சுற்றுக்கள் : ஒரு கணினி அமைப்பின் குறிப்பிட்ட பகுதியின் உள்ளேயும் வெளியேயும் மின் துடிப்புகளைச் செலுத்தும் ஏற்ற இறக்கத் தொடர்.

logic control statement : தருக்கமுறை முறைக் கட்டுப்பாட்டுக் கட்டளை அறிக்கை.

logic device : தருக்க சாதனம் : ஒரு சாதனத்தை அடையாளம் காட்டும் ஒரு பெயர் அல்லது அடையாளம்.

logic diagram : தருக்க வரைபடம் : தருக்க முறை வடிவமைப்பைக் குறிப்பிடும் வரைபடம். சில சமயங்களில் வன்பொருள் இயக்கத்தையும் இதில் குறிப்பிடுவதுண்டு.

logic drive:தருக்க இயக்கி:வன் வட்டு போன்ற பருப்பொருள் சேமிப்பு ஊடகம்.இயக்க அமைப்பு இயக்க அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு தனியான சேமிப்பகங்களாக்கப்படுகிறது.ஒரு வன்தட்டு 12 மெகா பைட் மீமிகு எண்மி சேமிப்புத் திறன் உள்ளதாக இருக்கலாம்.ஆனால் இயக்கு வதற்கு வசதியாக 42 மீமிகு எட்டியலை இரண்டு 'தருக்க இயக்கி" களாகப் பிரிக்கலாம்.எம்.எஸ் - டாசில் (MS-DOS) இரண்டு இருப்பிடங்களும் சி மற்றும் டி இயக்கி எனப்படும். (ஏ, பி மென் வட்டு இயக்கிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்).இங்கு சி-யும், டி-யும் பொதுவான சேமிப்பு ஊடகத்தைப் பங்கிட்டுக் கொள்ளும்.

logic element:தருக்கப் பொருள்:ஒரு தருக்கப்பணியைச் செய்யும் சாதனம்.

Logic error:அளவைப் பிழை:தருக்க முறைப்பிழை:நிரல் தொடரில் ஏற்படும் பிழை. இதனால் நிரல் தொடர் ஓடுவது பாதிக்கப்படாது. ஆனால்,வெளியீட்டில் பிழை ஏற்படலாம்.அளவை பிழை உள்ள நிரலாக்கத்தொடர்கள் முதலிலிருந்து கடைசி வாக்கியம் வரை ஓடும்.ஆனால்,தவறான விடையையோ அல்லது வெளியீட்டையோ தரும்.

logic expression:தருக்கமுறை எண்ணுருக்கோவை.

logic family:தருக்க குடும்பம்:ஒரே உற்பத்தி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு பல தருக்கப் பணிகளை வழங்கும் மின்னணு சாதனங் களின் வரிசை,

logic field:தருக்க முறைப்புலம்.

logic file:தருக்கக் கோப்பு:தட்டு அல்லது நாடாவில் உள்ள ஒரு கோப்பைக் குறிப்பிடும் பெயர் அல்லது அடையாளம்.

logic gates:தருக்க வாயில்கள்: மின் இலக்க முறை மின்சுற்றில் உள்ள பொருள்கள்.

logic log on:,தருக்க லாக் ஆன்: ஒரு கணினி அமைப்புக்கு அதனை பயன்படுத்துபவர் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் செயல்முறை.

'logic operation:தருக்க இயக்கம்: ஒன்று அல்லது மேற்பட்ட உள்ளீடுகளை ஆராய்ந்த விதி களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வெளியீட்டை உருவாக்கும் இயக்கம். logic operator : தருக்க இயக்கி : And, Or, Nand, Nor, Executive Or போன்ற பூலியன் இயக்கிகளில் ஒன்று.

logic probe : தருக்க ஆராய்ச்சி : மின்னணு சோதனைக் கருவிகளில் ஒன்று. இது தருக்க நிலை களில் ஒன்றை உண்மை (தருக்க 1), பொய் (தருக்க 0) - காட்டும் திறனுடையது.

logic programming : தருக்க நிரல் தொடரமைப்பு : சிக்கல்களை உரைக்கவும் தீர்க்கவும் தருக்கத் தையும், அனுமானத்தையும் பயன்படுத்தும் உடன் தொடர்புள்ள அறிவுக் குறிப்பீட்டு அணுகுமுறை.

logic programming language : தருக்க நிரல் தொடர் மொழி : நிரல் தொடரமைப்பு மொழி களில் ஒரு பிரிவு.

logic seeking : தருக்க தேடல் : இரு திசைகளிலும் செயல்படும் அச்சுப்பொறி சுருக்கமான அச்சிடும் பாதையைக் கண்டு பிடிக்கும் திறன்.

logic seeking : தருக்கமுறை தேடல்.

logic seeking printer : தருக்கம் தேடும் அச்சுப் பொறி : வரியின் உள்ளடக்கத்தைத் தேடி அதி வேகத்திலும் வெற்றிடத்தைத் தாண்டிச் செல்லக் கூடிய அச்சுப்பொறி.

logic symbol : தருக்கக் குறியீடு : ஒரு தருக்கப்பொருளை வரைபட முறையில் குறிப்பிடும் குறியீடு.

logic theorist : தருக்கக்கொள்கையியலார் : கணிதக்கொள்கைகளை எண்பிக்கப் பயன்பட்ட ஆரம்பகால தகவல் செயலாக்க நிரல் தொடர்.

logic theory : தருக்கக்கொள்கை : கணித இயக்கங்களின் அடிப்படையாகக் கொண்ட அளவை இயக்கங்களைப் பற்றிக் கூறும் அறிவியல்.

logic tree : தருக்க மரம் : கிளை பிரி உருவகிப்புகளைப் பயன்படுத்தும் ஒரு தருக்க வழிமுறையாகும். மரத்தின் ஒவ்வொரு கிளைக் கணுவும் ஒரு தீர்வுசெய் புள்ளியைக் குறிக் கின்றன. கிளையின் நுனியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறிக்கப்பட்டிருக்கும்.

log in : உள் நுழைதல் : கணினியில் ஒப்பமிட்டுப் பணி துவங்குதல். Log on போன்றது.

log in name : உள்நுழையும் பெயர் : கணினி அமைப்பு ஒரு பயன்படுத்துபவரை அறிந்து கொள்ளும் பெயர். password-க்கு உடன்பாட்டுச் சொல் அல்ல. login security:உள்நுழை காப்பு.

logo:லோகோ: உயர்நிலை நிரல் தொடர் மொழி.வரைபடமுறை முகப்பு பயன்படுத்து வோரிடம் உள்ளது என்று அனுமானிப்பது. மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இளை ஞர்கள் அதிகம் பயன்படுத்துவது.வணிகம் மற்றும் தொழில்துறைகளில் வரைபட முறை அறிக்கை களை உருவாக்குவதற்கு அதிகம் பயன்படுவது. உரையாடல் முறையில் செயல்பட அனுமதிக்கும். இது திரையில் படங்கள் மற்றும் கணிதப் படங்களை வரைய எளிதில் கற்றுத்தருகிறது. செய்மோர் பாபர்ட் என்பவரால் எம்.ஐ. டியில் உருவாக்கப்பட்டது.

log off (log out):லாக் ஆப் (லாக் அவுட்): பயன்படுக்துபவர் ஒருவர் தன் வேலை நேரத்தை முடித்துக் கொள்வதை இது குறிப் பிடுகிறது.

logon:துவங்குதல்;நுழைமுறை:முகப்பு இயக்கத்தை ஒரு பயன்படுத்துபவர் துவங்குவது.

logon file:நுழைமுறை கோப்பு:தொடங்கு கோப்பு: புகுதி கைக்கோப்பு.

logotron logo:லோகோட்ரான் லோகோ: மற்ற லோகோக்களுடன் ஏற்புடைத்தான இதில் 16 கிலோ எண்மி (பைட்) சிப்பு உள்ளது.

log out:நிறுத்துதல்;வெளிவரு முறை: கணினியைப் பயன்படுத்துவதை நிறுத்துதல். log of போன்றது.

long:நீண்ட:நிரல் தொடரமைப்பில் பயன்படுவது. 'சி' மொழியில் நீண்ட என்பது 4 எண்மி (பைட்டு)கள்.அதில் ஒப்பமிடலாம் (-2 ஜி முதல் +2ஜி) அல்லது ஒப்பமிடாமல் விடலாம் (4ஜி).

long card:நீண்ட அட்டை: பீ.சி-க்களில், முழு நீள கட்டுப்பாட்டு அட்டை. அதனை விரி வாக்கத்துளைகளுடன் ஸ்லாட்டுடன் பொருத்த முடியும்.

long file names:நீண்ட கோப்புப் பெயர்: அண்மைக்கால பீசி இயக்க முறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98, விண்டோஸ் என்டி மற்றும் ஒஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட, பயனாளருக்கு வாய்ப்புத் தர கிறது. 250-க்கு மேற்பட்ட எழுத்து களில் கோப்பிற்குப் பெயர் சூட்டலாம்.ஆங்கிலச் சிறிய எழுத்து, பெரிய எழுத்து மற்றும் இரு சொற்களுக்கு இடையே இடவெளி இருக்கலாம். long-haul : லாங் ஹால் : நீண்ட தொலைவுகளுக்குத்தகவல்களை அனுப்பக்கூடிய திறனுள்ள மோடெம்கள் அல்லது தகவல்தொடர்புச் சாதனங்கள்.

longitudinal redundancy check : நீள் தொலைவு திரும்பவரல் சோதனை : பிழை சோதிக்கும் தொழில் நுட்பம். விவரத் தகவல் தொடர்புகளில் பயன்படுவது. இணை சோதனை எழுத்தை ஒவ்வொரு தரவுக் கட்டத்திற்குள் உள்ள ஒவ்வொரு பத்தியின் துண்மிகளிலும் அமைக்க முடியும்.

long lines : நீண்ட கம்பிகள் : நீண்ட தொலைவுகளுக்கு தகவல்களை அனுப்புவதைக் கையாளும் திறனுடைய மின் சுற்றுகள்.

look alike : போலத் தோன்றுதல்; தோற்றப்போலி : 1. ஒரு நிரல் தொடரை இயக்குவதன் மூலம் மற்றொன்றையும் இயக்கும் முறை அறிதல். 2. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு படி எடுத்தல். போட்டியாளர்கள் ஒன்று போன்ற வேறொன்றை உருவாக்கி அளிப்பார்கள்.

look and feel : தோற்றமும் உணர்வும்; தோற்றம்- செயல்பாடு : ஒரு வன்பொருள் அல்லது மென்பொருளின் தோற்றம் மற்றும் செயல்பாட்டைக் குறிக்கும் தொடர். பெரும்பாலும் இத்தொடர் ஒப் பிட்டுச் சொல்லப் பயன்படுகிறது. (எ-டு) விண் டோஸ் என்டி-யின் தோற்றமும் உணர்வும் விண்டோஸ் 95 போலவே இருக்கிறது.

look in : உள் நோக்கு.

lookup : தேடியறி : விரிதாள் நிரல்களில் உள்ளிணைக்கப்படும் கூறு. ஒரு குறிப்பிட்ட விரிதாள் பரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுத் தளத்தில் தரவுவை எளிதாகத் தேடியறியும் பொருட்டு முன்கூட்டியே தரவுத் தளத்தின் முதன்மை மதிப்புகளைக் கொண்ட தேடியறி (Look. up) அட்டவணை உருவாக்கப்பட்டிருக்கும். தேடியறி அட்டவணையில் கிடக்கை (Row) நெடுக்கை (Column) களில் தரவு பதியப்பட்டிருக்கும். ஒரு தேடி யறி செயல்கூறு (Lookup Function) இந்த அட்ட வணையில் கிடை மட்டமாகவோ செங்குத் தாகவோ குறிப்பிட்ட முதன்மை மதிப்பைத் தேடும். அதைக் கொண்டு மூலத்தரவு அட்டவணையில் அம்மதிப்புக் குரிய சரியான தரவுவைக் கண்டு சொல்லும்.

lookup function : தேடியறி செயல்கூறு.

lookup reference : தேடல் குறிப்பு. lookuptable : தேடல் அட்டவணை.

loop : வட்டம்;சுற்று;மடக்கி;கொக்கி வளையம் : சில குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறை வேற்றப்படும்வரை மீண்டும் மீண்டும் செயல் படுத்தப்படும் நிரலாக்கத் தொடரின் தொடர் நிரல்கள்.

loop back plug : லூப்பேக் பிளக் : கண்டறியும் இணைப்பி. அனுப்பும் கம்பியை மீண்டும் பெறும் கம்பிக்கு அனுப்பி சோதனை செய்யச் சொல்வது.

loop carrier : சுற்றுப்பாதை தூக்கி : தொலைபேசி தகவல் தொடர்புகளில் பயன்படுவது. தொலைவில் உள்ள இறுதி நிலையத்திலிருந்து மைய அலுவலகத்திற்குச் செல்லும் ஒப்புமை (அன லாக்) அல்லது இயக்க முறை (டிஜிட்டல்) கம்பி களைக் கவனிக்கும் ஒரு அமைப்பு. தொலை நிலையத்தின் ஒப்புமைக் குரலை இயக்க முறை யாக மாற்றித் தருகிறது. வாடிக்கை யாளருக்கு ஐ. எஸ். டி. என். சேவையை அளிக்க இதைப் பயன் படுத்தலாம்.

loop code : சுற்றுக் குறியீடு : ஒரு நிரல் தொடரின் சுற்றைப் பயன்படுத்தி நிரல்களின் தொடர்ச்சியை மீண்டும் மீண்டும் செய்தல். நேர் வரிசைக் குறியீடு அமைப்பதைவிட சுற்றுக் குறியீட்டில் அதிக செயல் நேரம் எடுக்கும். ஆனால், சேமிப்பகத்தில் மீதம் கிடைக்கும்.

loop configuaration : மடக்கு தகவமைவு : ஒருவகை தகவல் தொடர்பு இணைப்பு முடிவுற்ற மடக்காகச் செயல்படும் நிலையங்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு தகவல் தொடர்புத் தடமாக்குதல். இது போன்ற அமைப்பில், ஒரு நிலையம் அனுப்பும் தரவுவை அடுத்திருக்கும் நிலையம் பெறும். தரவு தனக்கில்லையெனில் அதனை அடுத்த நிலை யத்துக்கு அனுப்பி வைக்கும். இவ்வாறு, தரவானது இறுதி இலக்கை அடையும்வரை பயணம் செய்யும்.

loop, control : கட்டுப்பாட்டுமடக்கி.

loop counter : சுற்றுப்பாதை எண்ணுமிடம் : ஒவ்வொரு முறை ஒரு சுற்றுப் பாதை இயக்கப் படும்போதும் ஒரு எண் (வழக்கமாக 1) அதிகரிக்கும் அல்லது குறைக்கும் கணினி. எத்தனை முறைகள் இயக்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க ஒரு நிரல் தொடர் மூலம் இது இயக்கப்படுகிறது.

loophole : ஓட்டை : கணினி அமைப்பின் அணுகுக் கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும் வன் பொருள் அல்லது மென்பொருளின் தவறு அல்லது விட்டுப் போதல்.

looping : பன்முறை செய்தல்; கொக்கி வளையமாக்கல் : அதே நிரல் அல்லது நிரல்களின் தொடர்ச்சியை மீண்டும் மீண்டும் செயல்படுத்துதல்.

loop, invariant : மாறாநிலை மடக்கி : ஒரு மடக்குச் செயல் திரும்பத் திரும்பச் செய்யப்படும்போது சரி என்ற நிலை மாறாதிருக்கும் ஒரு நிபந்தனை.

loop, nesting : பின்னல் மடக்கு.

loop, ring network : வளையப் பிணைய மடக்கி

loopsely coupled : இலேசாக இணைக்கப்பட்டது : ஒரு கட்டமைப்பின் வழியாக இணைக்கப்பட்டு தனியாக நிற்கும் கணினிகளைக் குறிப்பிடுகிறது. இலேசாக இணைக்கப்பட்ட கணினிகள் தாங்களாகவே செயலாக்கம் புரிந்து தேவைக்கேற்ப தரவுகளைப் பரிமாறிக் கொள்வன.

loop structure : சுற்று அமைப்பு : வடிவமைக்கப்பட்ட ஒடு படத்தின் மூன்று அடிப்படை அமைப்புகளில் ஒன்று. ஒரு சூழ்நிலை ஏற்படும்வரை மீண்டும், மீண்டும் ஒரு பணியைச் செய்ய இது வழி செய்கிறது.

loop technology : சுற்று தொழில்நுட்பம்  : ஒரு கணினி கட்டமைப்பில் எந்திரங்களை ஒன்றாக இணைத்து, தரவு தொடர்பு கொள்ளும் முறை.

loss : இழப்பு.

loss balancing : இழப்பு ஈடு கட்டல் : 1. அலைபரப்பில் ஒரு சமிக்கை திறனிழக்கும்போது அதனை ஈடுகட்டும் பொருட்டு திறன்பெறுக்கல் (amplification) 2. ஒரு மதிப்பினை வேறொன்றாகப் பெயர்க்கும்போது ஏற்படும் இழப்பினை ஈடுகட்டல்.

lossless compression : தளர்ச்சியில்லாத சுருக்கம் : தரவுகளை மூலத்தில் இருந்தது போன்று 100 விழுக்காடு பழையபடியே விரித்துக் கொண்டு வரும் சுருக்கத் தொழில் நுட்பம்.

lossy compression : தளர்ந்த சுருக்கம் : தரவுகளை மூலத்தில் இருந்தது போன்ற பழைய நிலை அளவுக்கு 100% மாற்றி அமைக்காத சுருக்கத் தொழில் நுட்பம். சுருக்கத்தைக் கூட்டுவதற்காக படங்கள் மற்றும் குரல் மாதிரிகளை தளர்ச்சியான துல்லியத்தில் வைத்திருக்க முடியும்.

lostcluster : தொலைந்த தொகுதி : ஒரு கோப்பின் பெயருடனான. தங்களது அடையாளத்தைத் தொலைத்து விட்ட வட்டுப் பதிவேடுகள். ஒரு கோப்பினைச் சரியாக முடித்து வைக்காவிட்டால் இத்தகைய நிலை ஏற்படும். அதன் பயன்பாட்டி லிருந்து முறையாக வெளிவராமல் கணினியை நிறுத்தும்போது சில சமயம் இவ்வாறு ஏற் படுவதுண்டு.

lotus 1-2-3 : ஒரு மென் சாதனம் : அதன் பெயரே மூன்று பணிகளைக் குறிப்பிடும் ஒருங் கிணைந்த மென்பொருள் அமைப்பு. அகலத்தாள், தரவுத் தளம், வரைபடமுறை ஆகிய வைகளே இந்த 3பணிகள். தரவுத் தள மேலாண்மையுடன் மின் னணு பணித்தாளை இணைக்கிறது. இத்துடன் உடனடியாக படங்களாலான தரவு அல்லது வரைபட முறையை உருவாக்கும் திறனுடையது.

lotus add-in tool kit : லோட்டஸ் சேர்ப்பு கருவிப்பெட்டி : லோட்டசிடமிருந்து வரும் பாஸ்கல் போன்ற நிரல் தொடர் மொழி. லோட்டஸ் 1-2-3இன் மதிப்பு 3. 0-வில் இயக்குவதற்காக உரு வாக்க வேண்டிய தானியங்கிச் செயல்முறைகளை இது அனுமதிக்கிறது. இதில் ஒரு பதிப்பி (எடிட்டர்) தொகுப்பி (கம் பைலர்), பிழை நீக்கி (டி-பக்கர்) ஆகியவை இருக்கும். சேர்க்கும் பொருள்களைச் செய்பவர்கள் அதை பதிப்பு 3. 0-வுக்கு மாற்ற வசதி செய்து தருகிறது.

lotus manuscript : லோட்டஸ் கையெழுத்துப்படி : அறிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆவ ணங்களை எழுத வடிவமைக்கப்பட்ட சொல் மற்றும் ஆவண செயலகம்.

lotus menu : லோட்டஸ் பட்டி : லோட்டஸ் 1-2-3-உடன் அறிமுகப்படுத்தப்பட்டு நடை முறையில் தர நிர்ணயமாக ஆன பட்டியல் 'மெனு'. அதில் சொற்களின் வரிசை இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு enter பொத்தா னையோ அல்லது சொல்லின் முதல் எழுத்தையோ அழுத்தி தேர்ந்தெடுக்க வசதி உள்ளது. சொல் வந்தவுடன், அதற்கான விளக்கமும் வரும்.

Lovelace, Ada Augusta : லவ் லேஸ், ஆடா அகஸ்டா : லவ்லே சின் சீமாட்டி ஆடா அகஸ்டின் நிரல் தொடர் அமைப்பதற்கான முக்கியச் சிந்தனை களை உருவாக்கினார். சார்லஸ் பாபேஜின் நண்பரும் சிறந்த கணித மேதையுமான இவர் பகுப்பு எந்திரம் பற்றி எழுதியுள்ளார்.

low activity : குறைந்த BLவடிக்கை; குறைந்த செயற்பாடு : புதுப்பிக்கும் பணியில் மொத்தப் பதிவேடுகளில் ஒரு சிறிய பகுதியே செயல்பட்ட நிலை.

low bandwidth : குறுகிய அலைக்கற்றை,

low density : குறைந்த அடர்த்தி.

lower கீழ்நிலை;கீழ்த்தட்டு : டிபேஸ்/ சி-யில் ஒரு செயல் முறை. அதன் வாக்குவாத சரத்திற்குச் சமமான சிறிய எழுத்து சரத்தினைத் திருப்பி அனுப்புகிறது.

lower case : சிறிய எழுத்து; கீழ்த்தட்டு எழுத்து : தலைப்பு எழுத்து இல்லாத அகர வரிசை எழுத்துகள். விடிடீஎஸ் (VDTS) -இல் இதைப் பயன்படுத்த முடியாது.

lower level management : கீழ்மட்ட நிர்வாகம் : குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கான இயக்கும் முடிவுகளை எடுக்கும் முதல்வரிசை மேற்பார்வை யாளர்கள்.

lowest layer : அடிநிலை அடுக்கு.

low frequency குறைந்த அலை வரிசை : 30 முதல் 300, 000 ஹெர்ட்ஸ் அளவில் சுழலும் மின்காந்த அலை.

low level format : கீழ்நிலை படிவம் : ஒருவன் தட்டின் அடிப்படை (ஆரம்ப) நிறுவுதல், வன்வட்டின் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் இது நடைபெறுகிறது. வன்வட்டு இயக்கியில் பிரிவு தலைப்புகளை அடையாளம் செய்யும் செயல்முறை. பல வட்டு மேலாண்மை பயன்பாடுகளில் 'முன் படிவம்' எனப்படும் கீழ்நிலை படிவ அமைப்பும் செய்யமுடியும்.

low level language : அடிநிலை மொழி; தாழ்நிலை மொழி : பொறிசார்ந்த மொழி அல்லது மிகக் குறைந்த கட்டுப்பாட்டு ஆணை களையும் தரவு இனங்களையும் கொண்ட மொழி. அடிநிலை மொழியில் எழுதப்படும் நிரலின் ஒவ்வொரு கூற்றும் பெரும்பாலும் ஒரு பொறி ஆணையாக இருக்கும்.

low memory : கீழ் நினைவகம்;அடி நினைவகம் : மீச்சிறு எண்களால் சுட்டப்படும் நினைவக இருப்பிடங்கள். ஐபிஎம் பீசி களில் 1 மெகாபைட் நினைவகப் பரப்புக்குள் இருக்கின்ற முதல் 640 கிலோபைட் அளவுள்ள நினைவகப் பகுதி கீழ் நினைவகம் எனப்படுகிறது. கீழ் நினை வகப் பகுதி, ரேம் (RAM) நினைவகத்துக்கென ஒதுக்கப்படுகிறது. எம்எஸ் டாஸ் இயக்க முறைமையும் பயன்பாட்டுப் புரோகிராம்களும் அப்பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.

low misconvergence : குறைவான காட்சித் திருப்பம்.

low order : கீழ் நிலை : குறைந்த பலம் அல்லது முக்கியத்துவம் உள்ள எண்ணின் இலக்கம் அல்லது இலக்கங்கள் பற்றியது 7643215 என்ற எண்ணில் கீழ் நிலை இலக்கம் 5.

low order column : கீழ்வரிசை பத்தி : துளை அட்டை புலத்தில் அதிக எண்ணுள்ள வலது மூல பத்தி.

low pass filter : கீழ்க்கற்றை வடிக்கட்டி : ஒரு குறிப்பிட்ட அலை வரிசைக்குக் கீழேயுள்ள அதிர்வலைகளைக் கடந்து செல்ல அனுமதிக்கின்ற ஒரு மின்னணுச் சுற்று.

low pitch : தாழ் தொனி.

lowpower microprocessor : குறைதிறன் நுண்செயலி.

low quality : தாழ் செறிவு.

low radiation : குறைந்த கதிர்வீச்சு : குறைந்த அலைவரிசையையும் மிகக் குறைந்த அலைவரிசையையும் வெளியிடுகின்ற ஒளிக் காட்சி முனையங்களைக் (Video terminals) குறிப்பிடுவது. அலுவலக அறையைப் பிரிவினை செய்வதன் மூலம் இதைத்தடுக்க முடியாது. சி. ஆர். டி. யி லிருந்து இதை நீக்க வேண்டும். இது குறித்த உடல்நல ஆராய்ச்சிகள் முடிந்தபாடில்லை என்பதுடன் சர்ச்சைக்குரியவைகளாகவும் உள்ளன.

low res graphics : லோ ரெஸ் கிராஃபிக்ஸ் : Low resolution graphics என்பதன் சுருக்கம். குறைவான படப்புள்ளிகளைக் கொண்டு உரு வாக்கப்படும், காட்சித் திரையில் காணும் தடுமாறும் படம்.

low resolution : குறைந்த தெளிவு : வரைபட முறை திரையில் காணும் தகவலின் தரம் மற்றும் துல்லியம் பற்றியது. தெளிவின் தரமானது உருவம் ஏற்படுத்தும் படப்புள்ளிகளைச் சார்ந்தே உள்ளது. குறைந்த படப்புள்ளிகளைக் கொண்டு உருவாக்கப் படும் படத் தெளிவுகள் அதிக தெளிவு படங்களைப் போல துல்லியமாகவும், தெளிவாகவும் இருக்கும்.

low speed personnel computer networks : குறைவேக பீ. சி. பிணைப்புகள் : தனிநபர் கணினிகளையே இறுதி நிலை பயன்படுத்து பவர்களாகக் கொண்டுள்ள பிணைப்புகள்.

lowvoltage : குறைந்த மின்னழுத்தம்;தாழ் மின்னழுத்தம். low-order bit : கீழ்வரிசை துண்மி : கணினி சொல்லின் வலது ஓரத்தில் உள்ள துண்மி.

low-res graphics : குறைந்த பிரிதிறன் வரைவியல்.

l. p. : எல். பீ : linear programming மற்றும் line printer என்பதன் குறும்பெயர்.

LPI (Lines per Inch) : எல். பீ. ஐ. (ஒரு அங்குலத்திற்கு இத்தனை வரிகள்)  : ஒரு செங்குத்தான அங்குலத்திற்கு எத்தனை வரிகள் அச்சிடப்படுகிறது என்பது.

LPM : எல். பீ. எம் : Line Per Minute என்பதன் குறும்பெயர்.

LPT : எல்பீடி : வரி அச்சுப் பொறியின் தருக்கநிலைச் சாதனப் பெயர். எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் இணைநிலை அச்சுப் பொறித் துறை (port) க்கென ஒதுக்கப்பட்ட பெயர். அதிக அளவாக மூன்று வைத்துக் கொள்ளலாம். எல்பீடி1, எல்பீடீ2, எல்பீடீ3 என அவை அழைக்கப்படும். பிஆர்என் (PRN) என்பதும் அச்சுப்பொறியைக் குறிக்கும் தருக்கநிலைச் சாதனப் பெயராகும். இதுதான் எம்எஸ்-டாஸில் முதன்மை அச்சுநகல் வெளியீட்டுக்கான சாதன மாகக் கொள்ளப்படுகிறது. பெரும்பாலும், எம்எஸ் டாஸில் எல்பீடீ1 என்பதும் பிஆர்என் என்பதும் ஒன்றாக இருக்கும்.

. lr : . எல். ஆர் : ஓர் இணைய தள முகவரி, லைபீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

LRC : எல். ஆர். சி : Longitudinal Redundancy Check என்பதன் சுருக்கம். அதன் நீள்பாதையில் ஒரு குறிப்பிட்ட துண்மி சரத்தில் இருந்து இணையானதுண்மியை உருவாக்கி பிழை சோதிக்கும் முறை. காந்த நாடா போன்ற வரிசை. பத்தி படிவத்தில் வி. ஆர். சி. யுடன் எல். ஆர். சி. பயன்படுத்தப்பட்டு ஒவ்வொரு எழுத்துக்கும் இணை எழுத்து உருவாக்கப்படுகிறது.

. ls : . எல்எஸ் : ஓர் இணையதள முகவரி, லெசோத்தோ நாட்டைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ls : எல்எஸ் : யூனிக்ஸ் இயக்க முறைமையில் ஒரு கட்டளை. நடப்புக் கோப்பகத்திலுள்ள உள் கோப்பகங்கள் மற்றும் கோப்புகளின் பட்டியலைக் காண்பிக்கச் செய்யும் கட்டளை. அல்லது ஒரு குறிப்பிட்ட கோப்பகப் பெயரைக் கட்டளையுடன் குறிப்பிட்டு அதன் உள்ளடக்கத்தைப் பெற முடியும். இணையத்தில் ஏராளமான எஃப்டீபீ தளங்கள் பலவும் யூனிக்ஸ் முறைமையில் இயங்குபவை என்பதால் அத்தளங்களிலும் இக்கட்டளையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

LS-120 : எல்எஸ்-120 : ஓர் ஒற்றை 3. 5 அங்குல நெகிழ் வட்டில் 120 எம்பி தரவுவைச் சேமிக்கும் திறனுள்ள ஒரு நெகிழ்வட்டு இயக்ககம். எல்எஸ்- 120 இயக்ககங்கள் பிற நெகிழ்வட்டு வடிவாக்கங்களுக்கும் ஒத்திசைவானவை.

LSB : எல். எஸ். பி : Least Significant Bit என்பதன் குறும்பெயர்.

LSC : எல். எஸ். சி : Least Significant Character என்பதன் சுருக்கம்.

LSD : எல். எஸ். டி : Least Significant Digit என்பதன் குறும்பெயர்.

LSI : எல். எஸ். ஐ : Large Scale Integration என்பதன் குறும்பெயர்.

. lt : . எல்டி : ஓர் இணையதள முகவரி லித்துவேனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. lu : . எல்யூ : ஓர் இணையதள முகவரி லக்ஸம்பர்க் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

LU : எல்யூ : தருக்க அலகு எனப் பொருள்படும் Logical Unit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஓர் ஐபிஎம் எஸ்என்ஏ பிணையத்தில் ஒரு தகவல் தொடர்பு உரையாடலின் தொடக்கம் அல்லது முடிவைக் குறிக்கும் புள்ளி.

LUG : எல்யூஜி : Linux Users Group என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர்.

luggable computer : எடுத்துச்செல் கணினி : கைப்பெட்டிக் கணினி : 1980களின் தொடக்கத் தில் அல்லது மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லத்தக்க முதல் கணினிகள். இந்தத் தொடக்க காலக் கணினிகள் சிஆர்டீ அடிப் படையிலான காட்சித்திரைகளைக் கொண்டி ருந்தன. 20 பவுண்டுக்கு மேல் எடை கொண் டவை. நடுத்தரக் கைப்பெட்டியின் அளவுடையவை. எனவே தான் இப்பெயர் ஏற்பட்டது.

lumen : லூமென் : ஒளியின் ஓட்டத்தை அளக்கும் அலகு. ஒரு மெழுகுவர்த்தி 13 லூமென் களை உருவாக்குகிறது. 100வாட் பல்பு 1, 200 தருகிறது. lumena : லூமனா : டைம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பீ. சி. ஒவிய நிரல் தொடர். என். டி. எஸ். சி. ஒளிக்காட்சி (விடியோ) வெளியீடுகளை அது ஏற்று உருவாக்குகிறது. அதற்கு ஒரு ஒளிக்காட்சி வரைகலை தேவை.

luminance : ஒளிர்வு : பிரகாசத்தைக் கட்டுப்படுத்தும் கூட்டு ஒளிக்குறிப்பின் பகுதி.

luminance decay : ஒளிர்வு மங்குதல் : காட்சித்திரை முகப் பில் நீண்ட நேரத்துக்குப் பிறகு ஏற்படும் திரை வெளிச்சத்தின் குறைவு.

luminosity : ஒளிர்திறன்.

lurk : ஒளிவு; பதுக்கம் : ' ஒரு செய்திக் குழுவில் அல்லது நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில் தாம் எதுவும் அனுப்பாமல் கட்டுரைகளையும் செய்திகளையும் பெற்றுக் கொண்டிருத்தல்.

. lv : . எல்வி : ஒர் இணைய தள முகவரி லாத்துவியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

. ly : . எல்ஒய் : ஒர் இணைய தள முகவரி, லிபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

lynx : லின்ஸ்க் : யூனிக்ஸ் பணித்தளத்தில் செயல்படும் ஒரு வலை உலாவி. உரைப் பகுதிகளை மட்டுமே பார்வையிட முடியும்.

. lzh : . எல்இஸட்ஹெச் : லெம் பெல்ஸிவ் மற்றும் ஹகுயாசு படிமுறைத் தருக்கப்படி இறுக்கிச் சுருக்கப்பட்ட காப்பகக் கோப்புகளின் கோப்பு வகைப்பெயர் (File Extension).

LZW compression : எல்இஸட்டபிள்யூ இறுக்கம் : கோப்புகளை இறுக்கிச் சுருக்குவதற்கான ஒரு படிமுறைத் தருக்கம் (algorithm). மீண்டும் மீண்டும் இடம் பெறும் ஒரே மாதிரியான சரங்கள் (strings) சில குறிப்பிட்ட குறியீடுகளால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஜிஆர்எஃப் இறுக்கு முறைக்கும் இதுவே அடிப்படை ஆகும்.